மதுரை கிழக்கு தொகுதியில் தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மூர்த்திக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது, மேலும் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் யாதவ சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்க படுகிறது, மதுரையில் அடாவடி அரசியலுக்கு பெயர் போனவர் திமுக எம்.எல்.ஏ மூர்த்தி.
மதுரை கிழக்கு திமுக மாவட்ட செயலாளராக இருக்கும் மூர்த்தி அந்த மாவட்டத்தில் அவரை தவிர்த்து திமுகவில் யாரையும் வளர விடாமல் பார்த்து கொள்வதில் உறுதியாக இருந்து வந்துள்ளார், மேலும் மதுரையில் பிற மாவட்ட செயலர்களிடம் அந்தந்த மாவட்டத்தில் உங்களை மீறி யாரையும் வளர விட்டால், பிறகு உங்களுக்கு தான் ஆபத்து என எச்சரித்து மதுரை மாவட்டத்தில் திமுகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளார் என திமுக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அடாவடியாக பேசுவது, நிர்வாகிகளுக்கு தகுந்த மரியாதை தருவது கிடையாது என மதுரை திமுகவினர் மத்தியில் அவப்பெயரை பெற்றுள்ள மூர்த்தி, தொகுதி மக்களிடமும் அடாவடிக்கு பெயர் போனவர் என தனது செல்வாக்கை இழந்துள்ளார், மதுரையில் யாதவர் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை சில வருடங்களுக்கு முன் ஆட்டைய போட முயற்சித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார் மூர்த்தி.
மதுரை கிழக்கு தொகுதியில் 40 சதவிகிதம் மேல் யாதவ சமூக மக்களின் வாக்குகள் இருக்கும் நிலையில், யாதவ அறக்கட்டளை விவகாரம் அந்த தொகுதி இருக்கும் யாதவ சமூக மக்களை அவருக்கு எதிராக திருப்பியது குறிப்படத்தக்கது, மேலும் எம்.எல்.ஏ மூர்த்தி மதுரையில் அவர் வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் பற்றி வெளியான செய்தியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து காரணத்துக்காக பாஜக நிர்வாகி வீட்டுக்கு சென்று இடுப்பில் மறைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியும், பாஜக நிர்வாகி மனைவியை செருப்பால் அதிக பாய்ந்த காட்சிகள், பாஜக நிர்வாகி வீட்டில் இருந்த சிசிடிவி யில் பதிவாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே அடாவடிக்கு பெயர் போனவர் எம்.எல்.ஏ மூர்த்தி என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், அவரின் அடாவடி செயல் சிசிடிவியில் வெளியாகி தொகுதி மக்களிடம் அவருக்கு கடும் அவப்பெயரை பெற்று தந்தது,மேலும் இந்த சம்பவம் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி தந்தது, இந்நிலையில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் மதுரை கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியை தொடங்கியுள்ள திமுக எம்.எல்.ஏ மூர்த்திக்கு இம்முறை சீட் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதுரை கிழக்கு தொகுதியில் 40 சதவிகிதம் மேல் யாதவ சமூக மக்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதே யாதவ சமூகத்தை சேர்ந்த ராஜகண்ணப்பன் திமுக சார்பில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது, அதே போன்று அதிமுக சார்பில் யாதவ சமூகத்தை சேர்ந்த முன்னால் எம்பி கோபாலகிருஷ்ணன் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், யாதவ சமூக வாக்குகளை பெற இரண்டு திராவிட கட்சிகளும் யாதவ சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களை களம் இறக்க முடிவு செய்திருப்பதாக மதுரை கிழக்கு தொகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.