தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அங்கு இந்திய அணி விளையாட செல்லுமா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் சுற்றுப்பயணம் 9 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர் டிசம்பர் 17 ஆம் தேதி தொடங்க இருந்தது.
இதற்காக இந்திய அணி டிசம்பர் 8 ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா செல்ல இருந்தது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் தடுப்பூசிக்கு எதிராக செயல்படும் என்று தகவல்கள் பரவியதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தென் ஆப்பிரிக்காவோடு போக்குவரத்து தொடர்பைத் துண்டித்துள்ளன.
இந்நிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று கிரிக்கெட் தொடரை விளையாடுமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து பலவிதமான கருத்துகள் வெளியான நிலையில் இன்று நடந்த பிசிசிஐ கூட்டத்தில் தென் ஆப்பிரிக்கா தொடர் 9 நாட்கள் தாமதமாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி முதல் டெஸ்ட் போட்டி 26 ஆம் தேதி நடக்கும் என்றும் இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு செல்வது 9 நாட்கள் தாமதமாக செல்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.