ஆயுதத்துடன் மதுரை பாஜக அலுவலகத்தில் புகுந்து தாக்குதல்.! பாஜக மாவட்ட தலைவர் மீது கொலை முயற்சி.!

0
Follow on Google News

மதுரை புறநகர் மாவட்ட பாஜக அலுவகத்தில் இருந்த பாஜக புறநகர் மாவட்ட தலைவரை பலத்த ஆயுதத்துடன் உள்ளே புகுந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சி மதுரை திருப்பாலையில் நடைபெற்றது இதில் தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் சிறப்பு அழைப்பாளராக வந்ததை தொடர்ந்து விழா ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக மதுரை புறநகர் மாவட்ட சார்பில் நடைபெற்றது.

இந்நிலையில் நிகழ்ச்சி நடப்பதற்கு முந்தைய நாள் (சனிக்கிழமை) திருப்பாலை பகுதியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் அந்த பகுதியில் உள்ள சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இணைந்து விழா நிகழ்ச்சிக்காக ஒட்டப்பட்ட போஸ்டர், சுவர் விளம்பரம் மற்றும் பாஜக கொடிகளை சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது, இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு, விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று ( ஞாயிறு ) பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன், புறநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர், இந்த நிகழ்வுக்கு வந்த பாஜக மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் ஹரிகரன் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது, இதில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஈடுபட்டதாக அங்கே இருந்த பாஜக நிர்வாகிகள் குற்றம் சுமத்தினர்.

இந்நிலையில் நிகழ்ச்சி நடத்த இடத்தில அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் பாதுகாப்பாக நிகழ்ச்சி முடிந்து பாஜக தலைவர்களை அனுப்பி வைத்தனர், இதனை தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் நிகழ்ச்சி முடிந்து மேலமடையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு திரும்பியதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் அவர் அலுவலகம் வந்த அடுத்த பத்து நிமிடத்தில் முகத்தில் கர்ச்சீப், மற்றும் முகக்கவசம் அணிந்த ஐந்து நபர்கள் கையில் கத்தியுடன் பாஜக அலுவகத்தில் புகுந்துள்ளனர்.

அலுவலகத்தில் உள்ள பிளாஸ்டிக் சேர் மற்றும் பொருட்களை சேதப்படுத்திய அவர்கள் முதல் தளத்தில் இருக்கும் பாஜக மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் இருக்கும் அறைக்குள் நுழைய முயன்ற போது அறை பூட்டியிருந்தது, பின் இரும்பு கதவு அருகே சென்ற மகா.சுசீந்திரனை இரும்பு கதவின் ஓட்டை வழியாக கத்தியால் குத்த முயற்சித்த போது சுதாரித்து கொண்ட மகா.சுசீந்திரன் விலகி கொண்டார், இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினர், தொடர்ந்து கதவை உடைக்க முயற்சி செய்த மர்ம நபர்கள்,இரும்பு கதவை உடைக்க முடியாததால் பின் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினார்கள், இந்த கட்சி அலுவகத்தில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.