டி 20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காயம் காரணமாக உலக கோப்பையை தொடரில் இருந்து பாதியில் விலகிய ஹர்திக் பாண்டியா தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.
இதற்கு முன்பு குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா மீது மும்பை அணி நிர்வாகமும் மும்பை ரசிகர்களும் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் ஹர்திக் பாண்டியா பேட்டிங் பவுலிங் இரண்டிலும் படுமோசமாக விளையாடி மும்பை ரசிகர்களை ஏமாற்றி விட்டார். அதிலும் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் மோசமான பவுலிங்கிற்கான எக்காண மேடையில் ஹர்திக் பாண்டியா தான் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அந்த அளவிற்கு ஹர்திக் பாண்டியாவின் பர்பாமென்ஸ் மோசமாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல், இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா ஒரு ஓவருக்கு 12 ரன்கள் விட்டுக் கொடுப்பதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பின் நேரடியாக டி20 உலக கோப்பைக்கு ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்வது திருப்திகரமானதாக இல்லை என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் பேசுகையில், “இனியும் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. ஏனெனில் இதுவரை இந்திய அணி எந்த ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை. மேலும் நட்சத்திர ஆள்ற உமர் என்ற பெயருக்கு ஏற்றார் போல ஹர்திக் பாண்டியா இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் எந்த இம்பார்ட்டையும் கொடுக்கவில்லை.
ஐபிஎல் தொடரின் ஆட்டத்தையும் சர்வதேச கிரிக்கெட் தொடரின் ஆட்டத்தையும் நாம் குழப்பிக் கொள்கிறோம். இரண்டும் முற்றிலும் மாறுபட்டவை. முக்கியமாக இந்தியாவில் இடம்பெற வேண்டும் என்றால், ஹர்திக் பாண்டியா முதலில் ஓராண்டாவது தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடி இருக்க வேண்டும். இந்திய அணியில் தேர்வு செய்வதற்கு இதுவே மிகவும் முக்கியம். ஆகவே தனி நபர்களுக்கோ அல்லது கிரிக்கெட் வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு செய்தால் நிச்சயம் இந்திய அணியால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியும். ஆஸ்திரேலியா அணி அடுத்து அடுத்து ஐசிசி கோப்பையை ஜெயிக்கிறது.அதற்கு காரணம் அவர்கள் கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு என்பதை புரிந்து கொண்டு விளையாடுகிறார்கள். அந்த புரிதல் இந்திய அணி நிர்வாகத்திடம் இல்லை என்றால் ஐசிசி கோப்பையை வெல்வது கடினம்” என்று இர்பான் வெளிப்படையாக அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்திய போட்டிகளில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் பவுலிங் இரண்டிலுமே தடுமாறி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் திருப்திகரமாக இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்திய அணியின் தேர்வு குழுவும் இது குறித்து ஹர்திக் பாண்டியாவிடம் கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக சிவம் துபே வை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக பலரும் கூறுகின்றனர். அவ்வளவு ஏன் ரவி சாஸ்திரி கூட, சிவம் துபேவின் பங்கு இந்தியா அணிக்கு தேவைப்படுவதாக புகழாரம் சூட்டியுள்ளார். அதே சமயம், தற்போது பேட்டிங்கில் கலக்கி கொண்டிருக்கும் சிவம் துபேவுக்கு பவுலிங்கில் அவரது திறமையை காட்ட சென்னை அணி அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.