நடராஜன் நல்ல விளையாடினாலும் வாய்ப்பு கிடையாதாம்..தேர்வு குழுவில் நடந்தது குறித்து யுவராஜ்சிங் சொன்ன தகவல்…

0
Follow on Google News

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 17வது சீசன் வருகின்றமே 26 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து எதிர்வரும் ஜூன் மாதம் டி20 உலக கோப்பை தொடர் 2024 தொடங்கவிருக்கிறது. t20 உலக கோப்பை தொடரில் விளையாடவிருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியின் பட்டியலை பிசிசிஐ தேர்வு குழு வெளியிட்டது.

ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகிய பேட்ஸ்மேன்களின் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்பட இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம், இதில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் களம் இறங்குவார்கள். பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்ட இந்த பட்டியல் பல்வேறு கிரிக்கெட் ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. ஐபிஎல் இல் படுமோசமாக சொதப்பி வரும் ஹர்திக் பாண்டியா மற்றும் ஆவேஷ் கான் போன்ற வீரர்களுக்கு எல்லாம் இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் ஆனால் அதிரடியாக விளையாடும் தமிழக வீரர் நடராஜன் போன்ற திறமை வாய்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று பல்வேறு தரப்பினரும் இணையம் முழுவதும் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியில் தேர்வு செய்திருப்பது குறித்து அவரது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். இது குறித்து யுவராஜ் சிங் பேசுகையில், “டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா ஜெய்சால் கூட்டணி தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க வேண்டும். விராட் கோலி மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்து வருகிறார்.

அவருக்கு அதுதான் சரியான இடம். அவரை அடுத்து நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவ் வந்துவிடுவார். இதை அடுத்து நமக்கு இடது கை மற்றும் வலது கை ஸ்பின்னர்கள் தேவை என்பதால் ரிஷப் பந்த் ஐந்தாவது இடத்தில் வருவார். ரிஷப் பந்தை பொருத்தமட்டில் இந்திய அணிக்காக கேம்களை வெல்லக்கூடிய ஆற்றல் மிக்க வீரராக செயல்பட்டு வருகிறார். முந்தைய போட்டிகளில் அதைச் செய்து காட்டியும் இருக்கிறார்.

இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி செயல்பட்டார்கள் என்பதை பொறுத்து பி சி ஐ தேர்வு குழு தேர்வு செய்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடு இருக்கிறார்கள் என்பதை பார்த்து எடுக்கவில்லை. அப்படி தேர்வு செய்தால் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்திருக்க மாட்டார்.

அவர் நிச்சயமாக டி20 உலகப் போய் தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன்” என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடு இருக்கிறார்கள் என்பதை பார்த்து இந்திய அணிக்கான T 20 உலக கோப்பைக்கு எடுக்கவில்லை என யுவராஜ் சிங் பேசியுள்ளது. ஐபிஎல்லில் அபாரமாக விளையாடும் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காதது சரிதான் என்று மறைமுகமாக யுவராஜ் சிங் கூறுகிறாரா என்று விவாதங்கள் எழுந்துள்ளன.