பிசிசிஐ தேர்வு குழு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி, டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தது. வருகிற ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் மட்டும் இன்றி, ரிசர்வ் வீரர்கள் பட்டியலிலும் தமிழக வீரர் நடராஜனின் பெயர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது பல்வேறு கிரிக்கெட் வீரர்களையும் கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளரான நடராஜனுக்கு t20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்காதது பற்றி ஏற்கனவே முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர். இவர்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் அவர்களும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நடராஜனை தேர்வு செய்யாதது பற்றி தனது கருத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடராஜன் பற்றிய சேன் வாட்சனின் கருத்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த மே இரண்டாம் தேதி அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது ஹோம் கிரவுண்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐம்பதாவது லீக் போட்டியில் விளையாடியது. இந்தப் போட்டி கடைசி பந்து வரை மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்றது. கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணியின் இந்த திரில்லான வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் நடராஜனும் ஒருவர். இந்தப் போட்டி மட்டுமின்றி நடப்பா ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் விளையாடிய அத்தனை போட்டிகளிலும் நடராஜன் சிறப்பாக விளையாடி வந்திருக்கிறார். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தார். மேலும் அவருக்கு பர்பிள் கேப் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரில் நடராஜனின் பவுலிங் ஸ்டைல் பாராட்டும் வகையில் இருந்து வருகிறது. நடராஜன் வீசும் யார்க்கர் பந்துகள் எதிரணியில் பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன் ஐ திணறடிக்க செய்கின்றன. நடராஜன் இவ்வாறு அருமையாக யார்க்கர் பந்துகளை வீசுவதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது பந்து வேகங்களில் மாற்றம் செய்து லேசான பவுன்சர்களையும் வீசுகிறார். சொல்லப்போனால் ஹைதராபாத் அணி நெருக்கடியில் இருக்கும் போதெல்லாம் நடராஜனின் பந்துவீச்சு தான் அணியின் வெற்றிக்கு கை கொடுக்கிறது.
இப்படி நடப்பு ஐபிஎல் தொடரில் நடராஜன் ஃபுல் ஃபார்மில் இருக்கும் போது, டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பிசிசிஐ தேர்வு குழு அவரை தேர்வு செய்யாதது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த அணியில் நடராஜனை தேர்வு செய்யாதது பற்றி ஏற்கனவே முன்னாள் வீரர் பத்ரிநாத் ஆதங்கம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் நடராஜனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றிய அவர் கூறுகையில், “நடராஜன் டி20 உலக கோப்பை தொடர்கான இந்திய அணியில் இல்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. யார்கரை மிகச் சரியாக வீசும் திறமை, பந்துவீச்சில் அவர் காட்டும் வேகம் மாறுபாடுகள் மட்டுமில்லாமல், இதை அவர் மீண்டும் மீண்டும் செய்கிறார். இதன் காரணமாகத்தான் நடராஜன் இந்தியா நிலையில் இடம்பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது.
மேலும் அவரது பொட்டன்ஷியல் சிறப்பாக இருக்கும் பொழுது, இந்திய கிரிக்கெட்டையும் தாண்டி உலக கிரிக்கெட்டுக்கும் மகிழ்ச்சி தரக்கூடியவர் ” என்று ஷேன் வாட்சன் நடராஜனை பாராட்டி இருக்கிறார். இந்நிலையில் டி 20 உலக கோப்பை இந்தியா அணியில் நடராஜன் இடம்பெறாதது இந்திய அணியின் தேர்வு குழு செய்த மிக பெரிய முட்டாள் தனம் என பலரும் விமசர்னம் செய்து வரும் நிலையில், தற்பொழுது தமிழக வீரர் நடராஜனுக்காக ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வாட்சன் குரல் கொடுத்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.