2024 ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகள் சுவாரஸ்யமாக நடந்து முடிந்தன. சிஎஸ்கே அணி இது வரை நடந்த இரண்டு போட்டிகளிலும் அபாரமாக வெற்றி பெற்று டேபிள் டாப்பில் முதலிடத்தில் உள்ளது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இருப்பினும், நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் தோனி களமிறங்கவில்லை என்பது அவரது ரசிகர்களை கலக்கமடைய செய்துள்ளது.
ஏனெனில் இந்த ஐபிஎல் தொடருடன் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார். இதனாலேயே நாடு முழுவதும் உள்ள தோனி ரசிகர்கள் அவரது ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த தொடரில் அடுத்தடுத்து நிறைய போட்டிகளில் சிஎஸ்கே விளையாடும் என்பதால் டோனி ரசிகர்கள் மத்தியில் தோனி களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. ஆனால் தோனி பேட்டிங் செய்வதற்கான வாய்ப்பு மிக குறைவு என்று சிஎஸ்கே வட்டாரம் கூறுகின்றன.
இப்படி தோனி இந்த ஐபிஎல் தொடரில் களம் இறங்காமல் இருப்பதற்கு காரணம் அவரது வயதா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்றுள்ள தோனிக்கு வயது 42 ஆகிறது. இந்த வயதிலும் ஐபிஎல் விளையாடுவதற்கு சிறந்த உடல் தகுதியுடன் இருக்கிறார். அண்மையில் நடந்து முடிந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கர் கொடுத்த கேட்சை கண்ணிமைக்கும் நொடியில் பாய்ந்து பிடித்தார் தோனி. இதுவே அவர் சிறந்த உடற் தகுதியுடன் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும்.
இந்த வயதிலும் விக்கெட் கீப்பிங் இல் அசத்தும் தோனி ஏன் பேட்டிங் செய்யாமல் இருக்கிறார் விரைவில் அவர் களம் இறக்கப்பட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தற்போது வரை நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் தோனி பேட்டிங் செய்யவில்லை. ஏனெனில் அவர் வரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கிறார். புதிய இம்பேக்ட் வீரர் விதியால் சிவம் தூபே கூடுதல் பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டுள்ளார்.
ஆகவே தோனி வழக்கமான ஏழாவது இடத்தில் இருந்து எட்டாவது இடத்திற்கு சென்று விட்டார். எட்டாவது வரிசையில் இருந்தால் என்ன தோனி பேட்டிங் செய்யலாம் என்று சிஎஸ்கே நிர்வாகம் கூறினாலும் தோனி இந்த விஷயத்தில் கரராக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, சென்னை அணி இப்போது அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், சிஎஸ்கே அணியில் ஒவ்வொரு வீரர்களும் எளிதாக 150 ஸ்ட்ரைக் ரேட்டை தொட்டு விடுகிறார்கள்.
குறிப்பாக இரட்ச்சின் ரவிந்த்ரா இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் 200க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். அதேபோல் சிவம்தூவே குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் அரை சதம் அடித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். பெங்களூரு அன்னைக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் ஸ்ட்ரைக் ரேட்டும் 200 க்கு மேல் எகிறியது. இவர்களுக்கு மத்தியில் அறிமுக கிரிக்கெட் வீரரான சமீர் ரிஸ்வி தனது முதல் ஐபிஎல் போட்டியில் தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளிலேயே இரண்டு சிக்ஸர்களை விளாசி வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இப்படி சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அனைவரும் அற்புதமாக விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் ஆட்டத்தை கெடுக்கும் வகையில் வாய்ப்பு கொடுக்காமல் இடையே தான் நுழையப் போவதில்லை என்று தோனி முடிவெடுத்து இருக்கிறார். எனவே தான் தோனி பேட்டிங் செய்ய களம் இறங்காமல் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில் சில இறுதிப் போட்டிகளில் பேட்டிங் செய்வார் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதுவும் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்றால் மட்டுமே சாத்தியம்.இதனிடையே தனது ரசிகர்களை குஷிப்படுத்த தோனி பேட்டிங் செய்வாரா என்பது குறித்த உங்கள் கமெண்ட்களை இங்கே பதிவிடுங்கள்.