தெறித்து ஓடும் ஜோதிமணி… தெறிக்க விடும் பழனி கனகராஜ்… கரூரில் வெற்றியை உறுதி செய்த பாஜக..

0
Follow on Google News

நாடாளுமன்ற தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கையில், தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் சில முக்கிய தொகுதிகள் அரசியல் பார்வையாளர்களால் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது, அப்படி மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் தொகுதிகளில் முக்கியமான தொகுதி பாஜக தலைவர் அண்ணாமலையின் சொந்த தொகுதியான கரூர் பாராளுமன்ற தொகுதி.

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டிய கட்டாயம், மேலும் தன்னுடைய சொந்த தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் வெற்றிக்கு கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு யாரை தொகுதி பொறுப்பாளராக போடலாம் என்றதும், அண்ணாமலை மனதில் உடனே தோன்றியது அவருடைய நம்பிக்கை குரியவராக திகழும் பழனி கனகராஜ்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தன்னுடைய அதிரடி கள அரசியல் மூலம் அந்த மாவட்டத்தில் உள்ள ஆளும் திமுகவின் இரண்டு முக்கிய அமைச்சர்களை கதி கலங்க வைத்து கொண்டிருக்கும் திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் பழனி கனகராஜ் கரூர் தொகுதி பொறுப்பாளராக அண்ணாமலையால் நியமிக்கபட்ட உடனே, கரூர் தொகுத்திகுட்பட்ட அணைத்து ஒன்றியத்திலும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியை இரவு பகல் பாராமல் துரிதமாக பணியாற்றி வருகிறார் பழனி கனகராஜ்.

இந்த தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் ஜோதிமணி செல்லும் இடமெல்லாம் மக்களின் கடும் எதிர்ப்பை பெற்று வருகிறார். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நீங்க நன்றி சொல்ல கூட இந்த தொகுதி பக்கம் வரல, வெற்றி பெற்று 5 வருடம் என்ன செஞ்சீங்க என பிரச்சாரத்திற்கு சென்றுள்ள ஜோதிமணியிடம் மக்கள் சரமாரியாக கேள்விகளை கேட்க, பதில் சொல்ல முடியாமல், இடத்தை காலி பண்ணு கைப்புள்ள மக்கள் ஓன்று கூடிட்டாங்க என வடிவேலு காமெடியில் வருவது போன்று தெறித்து ஓடி வருகிறார் ஜோதிமணி.

மேலும் ஏற்கனவே ஜோதிமணிக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, ஜோதிமணி மீது கடும் அதிருப்தியில் இருந்து வரும் கரூர் திமுகவினர், தற்பொழுது மீண்டும் ஜோதிமணிக்கு சீட் கொடுத்துள்ளது மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் செந்தில்பாலாஜியை எதிர்த்து அரசியல் செய்து வந்த ஜோதிமணி வெற்றி பெற்றால் அது செந்தில்பாலாஜிக்கு கிடைத்த தோல்வியாக பார்க்க படும் என்பதால் கரூர் திமுகவினர் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட வில்லை என்கிறது கரூர் தேர்தல் களம்.

சமீபத்தில் கனிமொழியை அழைத்து வந்து தனக்கு ஆதரவாக பிரச்சாரதில் ஈடுபட வைத்தார் ஜோதிமணி, ஆனால் கனிமொழி வந்தும் கூட ஜோதிமணிக்கு ஆதரவாக கூட்டம் வரவில்லை. இப்படி ஒரு பக்கம் ஜோதிமணியின் தேர்தல் பிரச்சாரம் மந்தமாக சென்று கொண்டிருக்க, மறுபக்கம் பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. கரூர் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட பழனி கனகராஜ்.

ஜோதிமணி புகைப்படத்தை காண்பித்து, இந்த அம்மா தான் உங்க தொகுதி எம்பி, இவர் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு வாக்களித்த உங்களுக்கு நன்றி சொல்ல கூட வரவில்லை, அப்படி உங்க ஊருக்கு வந்து நல திட்டம் ஏதாவது செய்திருக்கிறார் என்று சொன்னால் அவர்களுக்கு 50 ஆயிரம் பரிசு என 50 ஆயிரம் பணத்தை தூக்கி பழனி கனகராஜ் காண்பித்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் யார் இந்த அம்மா.? எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என தலையை சொரிந்தார்.

இந்நிலையில் கரூர் தேர்தல் களத்தில் அதிமுக என்கிற கட்சி போட்டியிடுகிறதா என்று மக்கள் தேடும் அளவுக்கு அதிமுக அட்ரஸ் இல்லாமல் போக, பாஜக – காங்கிரஸ் இருவருக்கும் இடையிலான நேரடி போட்டியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜோதிமணியை வீழ்த்தி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் கரூரில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதை தேர்தல் களத்தில் பார்க்க முடிகிறது.