நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி ருதுராஜை கேப்டனாக நியமித்தார். இது தோனி ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த ஐபிஎல் சீசனில் பேட்டிங்கை காண நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், நீண்ட காலமாக ஏழாவது வரிசையில் இருந்த தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அணியின் எட்டாவது வரிசைக்கு சென்றுவிட்டார்.
இதனால் இதற்கு முன்பு நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் தோனி பேட்டிங் செய்யவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்யும்பொழுது, ஸ்டேடியத்தில் இருந்த மிகப்பெரிய திரையில் தோனியை காட்டும் போதெல்லாம் அவரது ரசிகர்கள் அவர் பேட்டிங் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். ஆனால், அந்த இரண்டு போட்டிகளிலும் மகேந்திர சிங் தோனி களமிறங்கவில்லை.
இப்படி ஹோம் கிரவுண்டில் தல தரிசனம் கிடைக்காமல் தவித்துப் போன ரசிகர்கள், விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தோனியின் பேட்டிங்கை பார்த்து உற்சாகமடைந்தனர். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசியாக களம் இறங்கிய தோனி சிக்ஸர் பவுண்டரி என ரண்களை குவித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோனி ஆடிய விதத்தை பார்த்த ரசிகர்கள், தோனி நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விசாகப்பட்டினம் மைதானத்தில் எட்டாவதாக களம் இறங்கிய தோனி முகேஷ் குமார் வீசிய முதல் பந்திலேயே பௌண்டரியை விலாசினார். தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளை பவுண்டரிக்கு அடித்த தோனி, கலீல் அகமது பந்துவீச்சில் பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டார். கடைசியாக நோக்கியா ஓவரிலும் இரண்டு சிக்ஸர்களை எகிற விட்டு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
இந்தப் போட்டியின் முடிவில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்திருந்தாலும் தோனியின் அதிரடியான ஆட்டத்தால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார்கள். தோனியின் இந்த அபார ஆட்டத்தை பார்த்த பின்னர் அவரது ரசிகர்கள் மட்டுமே கிரிக்கெட் வீரர்களும் அசந்து போய்விட்டனர். இந்தப் போட்டிக்குப் பிறகு தோனியின் பேட்டிங் பற்றி கிரிக்கெட் வீரர் பிரட்லி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “இன்றைய போட்டியில் தோனியின் பேட்டிங்கை பார்த்த பொழுது அவர் நல்ல உடல் தகுதியுடன் தான் இருக்கிறார்,
அவரது பேட்டிங் திறமைக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிகிறது. அவர் இன்னும் சிறப்பாக ஆட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அவர் சென்னை அணியில் முன் வரிசையில் வந்து பேட்டிங் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி இல்லையென்றால் சென்னை அணி நிர்வாகம் அவரை முன்வரிசைக்கு அனுப்பி விளையாட வைக்க வேண்டும்” என பிரட் லீ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லி அணியிடம் சிஎஸ்கே அடைந்த தோல்விக்கு முக்கிய காரணம் சிஎஸ்கே அணி செய்த தவறும் மற்றும் ஒரு வகையில் தோணியும் தான் என்பதை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார் பிரட்லீ. அதாவது டோனியை கடைசி பேட்ஸ் மேனாக இறக்கி விடாமல், இரண்டு அல்லது மூன்றாவது நபராக இறக்கி விட்டிருந்தால் சிஎஸ்கே அணியை தன்னுடைய அதிரடி விளையாட்டால் வெற்றி அடைய செய்திருப்பார் தோணி, ஆனால் சிஎஸ்கே அணி செய்த தவறும், டோனி இரண்டு அல்லது மூன்றாவது பேட்ஸ் மேனகா இறக்காதது தான் அந்த அணியின் தோல்விக்கு காரணம் என்பதை மறைமுகமாக பிரட்லீ தெரிவித்துள்ளார்.