ஏமாற்றப்பட்ட சிஎஸ்கே…. தில்லாங்கடி செய்து சிஎஸ்கே அணியை வீழ்த்திய டெல்லி கேபிட்டலஸ்… மைதானத்தில் நடந்த மிக பெரிய போர்ஜரி…

0
Follow on Google News

விசாகப்பட்டின கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 13வது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணி டெல்லி கேப்பிட்டல் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை பறிகொடுத்து 191 ரன்கள் குவித்தது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களம் இறங்கிய சென்னை அணி கடைசி வரை போராடியும் 20 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் கடைசியாக களம் இறங்கிய தோனி சிக்ஸரும் பவுண்டரியுமாக அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தாலும் போட்டியின் முடிவில் சென்னை அணி தோற்றத்தை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணம் டெல்லி அணியால் மூடி மறைக்கப்பட்ட பிட்ச் ரகசியம் தான் என்று சொல்லப்படுகிறது.

டெல்லி அணியின் இரண்டாவது சொந்த மைதானமான விசாகப்பட்டினம் மைதானத்தின் பிட்ச்சை பற்றி நன்கு அறிந்த டெல்லி அணியினர் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். அதே சமயம் பிட்ச் பற்றிய தகவலை சிஎஸ்கே அணிக்கு தெரியவிடாமல் பார்த்துக் கொண்டனர். இதுவே சிஎஸ்கே அணியின் தோல்விக்கு வழி வகுத்ததாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளுடன் மோதி தோல்வியை சந்தித்த டெல்லி கேப்பிட்டல் அணி நேற்றைய போட்டியில் மூன்றாவதாக சென்னை அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கிய டெல்லி அணியினர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். டெல்லியணியின் அபாரமான ஆட்டத்திற்கு விசாகப்பட்டினம் மைதானம் இரண்டு விதமாக பந்து பவுன்ஸ் ஆகுமாறு வடிவமைக்கப்பட்டது முக்கிய காரணமாகும்.

அதாவது, எந்த அணி பேட்டிங் செய்தாலும் அந்த அணியின் வீரர்கள் இந்த பிட்ச்சை விரைவில் புரிந்து கொண்டால் மட்டுமே ரன் குவிக்க முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் போட்ட திட்டத்தின் படி பிட்ச் தயாராகி இருந்ததால் அந்த அணியின் வீரர்கள் பிட்ச் குறித்து நன்கு தெரிந்து வைத்திருந்தனர். இதனால் டெல்லி அணியின் சார்பில் களம் இறங்கிய வீரர்கள் அசத்தலாக விளையாடி ரன்களை குவித்திருந்தனர்.

குறிப்பாக, பிரித்வி ஷா 27 பந்துகளில் 43 ரன்கள் அடித்திருந்தார். டேவிட் கவர்னர் 35 பந்துகளில் 52 ரன்கள் அடித்து விளாசி இருந்தார். ரிஷப் பன்ட் 32 பந்துகளில் 51 ரன்கள் அடித்திருந்தார். இதை அடுத்து சென்னை அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. ஆனால் சென்னை அணி வீரர்களால் பந்து பவுன்ஸ் ஆகும் திசையை யூகிக்க முடியாததால், தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரண்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர்.

இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக ரகானே 30 பந்துகளில் 45 ரன்னும், மிச்சல் 26 பந்துகளில் 34 ரன்னும், ஜடேஜா 17 பந்துகளில் 21 ரன்னும், தோனி 16 பந்துகளில் 37 ரன்னும் அடித்திருந்தார். இப்படி சென்னை அணியினர் கடைசி வரை போராடியும் ஆட்டத்தின் முடிவில் 20 ஓவருக்கு 171 ரண்கள் மட்டுமே எடுத்தது. 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி சிஎஸ்கே வை வீழ்த்தியது. ஆக மொத்தம், விசாகப்பட்டினம் மைதானத்தின் பிட்ச் குறித்து முடிவுக்கு வர முடியாமல் சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது சென்னை அணியை வீழ்த்த தனுடைய சொந்த மைத்தனமான விசாகபட்டிணம் மைதானத்தை தனக்கு சாதகமாக வடவமைத்து டெல்லி அணி வெற்றி பெற்றது மிக பெரிய போர்ஜரி என சிஎஸ்கே ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.