சொந்த மண்ணிலே அசிங்க பட்ட ஹர்திக் பாண்டியா…வெளிநாட்டு வீரர் செய்த தரமான சம்பவம்…இந்த அவமானம் தேவையா.?

0
Follow on Google News

நடப்பு ஐபிஎல் சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. எப்போதும் போலவே ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மீது ரசிகர்களின் கவனம் அதிகம் உள்ளது. அதேநேரத்தில் வழக்கத்துக்கு மாறாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் வைக்கும் விமர்சனங்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது. ஆடுகளம், சமூக வலைதளம் என எங்கு பார்த்தாலும் அது தென்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள், ஆதரவாளர்கள் என்று இல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதனை ஒரே நேரத்தில் வெளிப்படுத்துவதே இதற்கு காரணம். இதனோடு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இணைந்து கொண்டு கேப்டன் ஹர்திக் குறித்த எதிர் கருத்துகளை அள்ளி வீசுகின்றனர்.‌ இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் இல்லை என்ற அறிவிப்பு வெளியான தருணத்தில் இருந்தே ஹர்திக் மீதான விமர்சனங்கள் பவுன்சர்களாக பாய்கின்றன. தற்போது அது உச்சத்தை எட்டி உள்ளது.

இத்தகைய சூழலில் 17-வது ஐபிஎல் சீசனுக்கான ‘மினி’ ஏலத்துக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ட்ரேட் செய்யப்பட்டார். இந்த சீசனில் மும்பை அணியை அவரே வழிநடத்துவார் என்ற அறிவிப்பும் வெளியானது. அப்போதே விமர்சனம் எனும் கருமேகங்கள் மும்பை அணியை சூழ்ந்தது. புதிய கேப்டன் தலைமையில் புதுப்பாய்ச்சலுடன் சீசனை தொடங்கிய மும்பை அணி, நடப்பு சீசனின் முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது.

இதற்கு கேப்டன் ஹர்திக்கின் கள செயல்பாடுகளே காரணம். அதனை மறுப்பதற்கு இல்லை. ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பந்து வீச்சாளரான பும்ராவை சரியாக பயன்படுத்தாமல் இருந்தது. முக்கியமாக அவருக்கு முதல் ஸ்பெல் கொடுக்காமல் ஹர்திக் பாண்டியாவே பந்து வீசியது தப்புக் கணக்காக அமைந்துவிட்டது.

மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற 8வது போட்டியில் மும்பையை சரமாரியாக அடித்து நொறுக்கிய ஹைதராபாத் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் 277/3 ரன்கள் குவித்து அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் அடித்த அணியாக பிரம்மாண்ட சாதனை படைத்தது. அந்த போட்டியில் மற்ற மும்பை பவுலர்கள் அனைவரும் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினர்.

ஆனால் பும்ரா மட்டும் 4 ஓவரில் 36 ரன்கள் மட்டும் கொடுத்து 9 என்ற எக்னாமியில் நன்றாக பந்து வீசினார். ஆனால் அப்படிப்பட்ட அவருக்கு முதல் 13 ஓவரில் பாண்டியா வெறும் 1 ஓவர் மட்டுமே கொடுத்தார். அதற்குள் ஹைதராபாத் அணியினர் 180 ரன்கள் அடித்து போட்டியை தலைகீழாக மாற்றி விட்டனர். இந்நிலையில் பும்ராவை அப்போட்டியில் ஆரம்பத்திலேயே ஹர்திக் பாண்டியா பயன்படுத்தியிருந்தால் கண்டிப்பாக 277 ரன்கள் அடித்த ஹைதராபாத்தை 250 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில், பும்ராவை 13வது ஓவரில் மீண்டும் பந்து வீச அழைத்ததில் அவர்கள் சாதுரியத்தை விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன் எதிரணியினர் இப்படி அடிக்கும் போது உங்களுடைய சிறந்த பவுலரை நீங்கள் விரும்பும் நேரத்தை விட முன்கூட்டியே கொண்டு வந்திருக்க வேண்டும். இது சூழ்நிலைக்கு தகுந்தார் போல் உடனடியாக உங்களை உட்படுத்திக் கொள்வதாகும். என தெரிவித்த ஸ்டீவ் ஸ்மித், தற்பொழுது ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் என அனைத்து தரப்பு மத்தியில் வரும் எதிர்ப்பு குறித்து இந்தியா மண்ணில் இந்தியா வீரருக்கு ஏற்பட்டு வரும் இந்த அவமானம் இதற்கு மும்பு வேறு யாருக்கும் நடந்தது இல்லை என மறைமுகமாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் நிலை உயரும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும் என்கிற பாடல் வரிகளுக்கு ஏற்ப செயல்படாமல் ஆணவ திமிரில் செயல்படும் ஹர்திக் பாண்டியாவுக்கு சொந்த மண்ணிலே சொந்த மணியிலே அவருக்கு ஏற்பட்டு வரும் அவமானம் குறித்து வெளிநாட்டு வீரர் ஸ்டீவ் ஸ்மித் வேதனை படும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது ஹர்திக் பாண்டியாவின் ஆணவ திமிரு.