தமிழக வீரருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட காரணம் இது தானம்… எப்படியெல்லாம் ஓரம் கட்ட பட்டுள்ளார்கள் பாருங்க…

0
Follow on Google News

2024 ஐசிசி t20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்முறை உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில்ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. நடப்பு உலக கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்த அணி, அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்டது.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பட்டியலை கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி பிசிசிஐ தேர்வு குழு வெளியிட்டது. அப்போதே, இந்திய அணி தேர்வு குறித்து கிரிக்கெட் வீரர்கள் உட்பட ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். தற்பொழுது, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அபிஷேக் நாயர் உலகக் கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியின் பட்டியல் குறித்து முக்கியமான விஷயம் ஒன்றை கூறி இருக்கிறார்.

அதாவது, தற்பொழுது தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்திய அணியில் ஒரு தமிழக வீரருக்கு கூட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது ஆரம்பம் முதலே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்திய அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறவில்லை என்பது குறித்து பல்வேறு பல்வேறு பிரபலங்களும் அவர்களது கருத்தை முன் வைத்திருந்தனர். குறிப்பாக தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து நடிகர் சரத்குமார் உட்பட பல்வேறு கிரிக்கெட் ஆர்வலர்களும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக விளையாடியிருந்தும் அவரது பெயர் இந்திய அணியின் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கூட ஆதங்கம் தெரிவித்து இருந்தார். நடராஜனை போலவே, தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிரடியாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். ஆனால் இவருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

தற்பொழுது வருண் சக்கரவர்த்தியின் பெயர் இந்திய அணியின் பட்டியலில் தேர்வு செய்யப்படாதது குறித்து அபிஷேக் நாயர் பேசுகையில், “வருண் சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் விஜய் ஹசாரே டிராபி வரை சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், அவர் பேட்டிங் பவுலிங் இரண்டையும் மேம்படுத்த வேண்டும் என்று அவருடைய தேர்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர். வீரர்கள் மூன்று துறையிலும் சிறப்பாக விளையாடினால் தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எண்ணுகிறார்கள். இதுதான் தேர்வு செய்யப்படுவதற்கான மனநிலையாகவே இருக்கிறது.

வருண் சக்கரவர்த்தி தற்பொழுது தனது ஃபீல்டிங்கை அருமையாக மேம்படுத்தி இருக்கிறார். கிரிக்கெட் வீரர்கள் மூன்று துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது, ஒரு துறையில் மட்டும் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிப்பது என்பது மிகவும் சிரமம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டிங் பவுலிங் பில்டிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பது போன்று அபிஷேக் நாயர் பேசியுள்ளது, தமிழக வீரர்களுக்கு மட்டும் அந்த தகுதியா.? அல்லது அணைத்து வீரர்களுக்கும் அந்த தகுதியா என்கிற கேள்வி எழுந்துள்ளது. காரணம், தற்பொழுது இந்தியா அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் அபிஷேக் நாயர் சொன்னது போன்று ஆல்ரவுண்டராகவா இருக்கிறார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.