ஹோட்டலில் எச்சில் இலை எடுக்கும் வேலை… விஜயகாந்த் சகோதரியின் நிலையை பார்த்தீர்களா.?

0
Follow on Google News

நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, அவரது குடும்பத்தையும் தொண்டர்களையும் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விஜயகாந்த் ஒரு நடிகர் அரசியல்வாதி என்பதை எல்லாம் தாண்டி, இல்லை என்று தேடி வரும் ஏழை எளிய மக்களுக்கு உணவிட்டு, பல்வேறு உதவிகளை வாரி வழங்கிய மனிதநேயமிக்க நல்ல மனம் படைத்த சிறந்த மனிதர் ஆவார். இதனாலேயே, கேப்டன் விஜயகாந்தின் மறைவு செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழகமும் துயரில் ஆழ்ந்திருந்தது. மேலும், தமிழ் சினிமாவில் 80, 90களில் ரஜினி, கமலுக்கு இணையாக கொடி கட்டி பறந்த விஜயகாந்த், திரையுலகில் உள்ள சாதாரண ஜூனியர் நடிகர்களிடம் கூட எந்தவித கர்வமும் இன்றி எளிமையாக பழகி வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தனது இறுதி காலம் வரை கஷ்டப்படும் ஜூனியர் நடிகர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வந்திருக்கிறார்.அதே சமயம் இன்றைய தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் சூர்யா போன்ற நடிகர்களுக்கும் அவர்களது ஆரம்ப காலத்தில் சினிமாவில் ஜொலிக்க விஜயகாந்த் உதவி செய்து இருக்கிறார். இப்படி பாமர மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை கேப்டன் விஜயகாந்தின் தயவினால் பிழைத்தவர்கள் ஏராளம்.

இவ்வாறு எல்லோருக்கும் வாரி வழங்கி உதவி செய்த விஜயகாந்த்தின் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் நிலைமை என்ன தெரியுமா? அவரது சகோதரிகளில் ஒருவர் கூலி வேலைக்கு சென்று வருவதாகவும், இன்னொரு சகோதரி ஹோட்டலில் இலை எடுக்கும் வேலை பார்த்து வருவதாகவும் பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் சகோதரிகளின் இளமை குறித்து சபிதா ஜோசப் கூறிய தகவல்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. விஜயகாந்தின் தந்தை அழகர் சாமிக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். முதல் தாரம் ஆண்டாளுக்கு நாகராஜ்,விஜயராஜ் என்கிற விஜயகாந்த் , திருமலா தேவி என மூன்று குழந்தைகள் இருந்தனர். மூன்றாவது குழந்தை திருமலா தேவிக்கு ஒரு வயது இருக்கும்போது ஆண்டாள் இறந்துவிட்டார்.

அதன் பிறகு, விஜயகாந்தின் தந்தை ருக்மணி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் அழகர். இந்த தம்பதியினருக்கு ஏழு குழந்தைகள் பிறந்தார்கள். எனவே விஜயகாந்தின் குடும்பம் மிகப் பெரிய குடும்பமாகும். பல்வேறு தடங்கலுக்கு பிறகு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சம்பாதித்து வந்த விஜயகாந்த், ஆரம்பத்தில் தன்னுடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு பணம் அனுப்பி பல்வேறு உதவிகளைச் செய்திருக்கிறார்.

விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் விஜயகாந்த் உடன் இருக்கும் வரை, அவரது சகோதர சகோதரிகளை நல்லபடியாக பார்த்து வந்திருக்கிறார். ஆனால், விஜயகாந்த் ராவுத்தரும் பிரிந்த பிறகு பெரும்பாலான சொத்துக்கள் விஜயகாந்தின் மனைவி பெயருக்கு சென்று விட்டது.இதனால், விஜயகாந்த் பக்கத்திலிருந்து எந்த ஒரு பண உதவியோ, அவசர உதவியோ அவரது சகோதர சகோதரிகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது என தெரிவித்த சபிதா ஜோசப்.

சொல்லப்போனால் விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போதே அவர் சகோதரி ஒருவர் ஹோட்டலில் எச்சில் இலை எடுக்கும் வேலை பார்த்து வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.இது தொடர்பான புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன” என்று சபிதா ஜோசப் பகிர் கிளப்பும் தகவல்களை கூறியிருந்தார்.