நடிகர் விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டது, பார்ப்பவர்களை மிகப்பெரிய அளவில் பரிதாபம் அடையச் செய்து இருக்கிறது. நானும் மதுரைக்காரன் தாண்டா என்று விஷால் சினிமாவில் கம்பீரமாக பேசும் வசனத்திற்கு விசில் அடித்த ரசிகர்கள் இன்று, மேடையில் விஷால் பேசிக் கொண்டிருக்கும் போது கையும் காலும் நடுங்கிக் கொண்டிருப்பதை பார்த்து என்ன ஆச்சு விஷாலுக்கு.?
விஷாலுக்கா இந்த நிலைமை.? என்று பரிதாபப்பட வைத்துள்ளது. ஆனால் விஷால் மேடைக்கு வரும் பொழுது அவருக்கு மலேரியா காய்ச்சல் உள்ளது அதிலிருந்து குணமடைந்து வந்துள்ளார் என்று, அந்த மேடையில் இருக்கிற தொகுப்பாளினி டிடி என்னதான் மேனேஜ் பண்ணினாலும், அது உண்மை இல்லை என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது.
அதாவது விஷால் இப்படி உடல் சோர்வுடன் கை கால் நடுக்கத்துடன், அவருடைய உடலே இப்படி மாறிப்போனதற்கு காரணம், அவருக்கு மலேரியா காய்ச்சல் அல்ல வேறு ஒரு விஷயம் என்கிற தகவலும் வெளியாகிறது. நடிகர் விஷால் பாலா இயக்கத்தில் அவன் இவன் என்கின்ற படத்தில் நடித்த போது விஷாலுக்கு மார் கண் வேண்டும் என்பதற்காக அவருடைய கண் சில சிகிச்சை மூலம் மாற்றி அமைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
அதாவது பலரும் விஷால் மார் கண் போன்ற நடித்து இருப்பார் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை என்றும், சில மருத்துவ சிகிச்சை செய்து, அவருக்கு அந்த கண், அது போன்று வடிவத்திற்கு வருவது போன்று செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஷால் அந்த படத்தில் நடித்து முடித்த பின்பு அந்த கண் இயல்பு நிலைக்கு மருத்துவ மூலம் சரிசெய்யப்பட்டாலும் கூட, அவரின் பார்வை அதே பழக்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.
மேலும் அப்படி அவருக்கு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சை மூலம் தொடர்ந்து ஒற்றைத் தலைவலி ஏற்பட்டு வந்திருக்கிறது, இப்படி கடுமையான தலைவலியில் அவதிப்பட்டு வந்த விஷால், ஒரு கட்டத்தில் அந்த வலியை மறக்க சில தவறான பழக்கங்களை அதிகரித்திருக்கிறார். அந்த வகையில் விஷாலின் இந்த நிலைமைக்கு பாலாவும் ஒரு காரணம் என்று சொன்னாலும். அது மட்டும் விஷாலுக்கு பிரச்சனை இல்லை. மற்றொரு சம்பவமும் உள்ளது என்கின்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
அதாவது நடிகர் விஷால் தொடர்ந்து சினிமா துறையில் நேர்மையாக நடந்து கொண்டாரா என்று பேசினால் என்றால் இல்லை, ஆனால் விஷால் இருக்கும் இந்த நிலைமையில் அதை பேசுவது சரியாக இருக்காது என்று தவிர்க்கும் சினிமா துறையைச் சார்ந்தவர்கள், விஷால் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து எடுத்த படங்கள் பல நஷ்டங்களை சந்தித்தது.
குறிப்பாக விஷாலுக்கு பைனான்ஸ் செய்த லைக்கா நிறுவனத்திற்கும் அவருக்கும் ஏற்பட்ட மோதல், ஒரு கட்டத்தில் நீதிமன்ற வரை சென்றது, இதனால் விஷால் சினிமா துறையின் பைனான்ஸ் செய்யக்கூடியவர்களின் நம்பிக்கை இழந்தார் விஷால், இதனால் விஷால் படம் எடுத்தா கூட யாரும் பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை. மேலும் நடிகர் சங்கம் – தயாரிப்பு சங்கம் இரண்டிலும் தலைமை பொறுப்பில் இருக்கும் விஷாலுக்கு தினம் தினம் ஒரு பஞ்சாயத்து.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல், இப்படி தொடர்ந்து சுற்றி சுற்றி பல்வேறு பிரச்சனைகளால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகர் விஷால் ஒரு தவறான பழக்கத்திற்கு அடிமையானதின் விளைவு தான், இன்று கம்பீரமாக இருந்த விஷால் பரிதாபக் கூடிய வகையில் காட்சியளிப்பதாக பலரும் வருத்தப்பட்டு கூறுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.