விஜய் – லோகேஷ் கூட்டணியில் வெளியான லியோ, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேநேரம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் லியோவுக்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு இல்லை, முதல் வாரத்துடன் தியேட்டர்கள் வெறிச்சோடி விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.லியோ’ ஏற்கனவே ஏழு நாட்களில் உலகளவில் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிரகார்வப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக மொத்த வசூல் என்று படக்குழு குறிப்பிட்டுள்ளனர். ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்த தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியான லியோ படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. இந்த படத்தின் திரைக்கதை லோகேஷ், ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர். விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது லியோ திரைப்படம் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் மற்றும் 2.0 ஆகிய இரண்டு படங்களுக்கு பிறகு அதிக வசூல் செய்த மூன்றாவது தமிழ் திரைப்படமாகும். நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்த விஜய்யின் லியோ பட வசூல் இப்போது குறைந்த வண்ணம் உள்ளது, வசூலில் வேகமே இல்லை, கொஞ்சம் கொஞ்சமாக வசூலிக்கிறது.
இந்நிலையில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் லியோ டிகாப்ரியோ நடித்த கில்லர் ஆப் தி பிளவர் மூன் என்னும் படத்தின் வசூலை லியோ தாண்டி விட்டதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியானது. ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் இதற்காக சந்தோஷப்பட்டாலும் மற்றொரு பக்கம் இது உண்மையா என அலசி ஆராய ஆரம்பித்து விட்டார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். இந்த விஷயம் தவறான தகவல் என சொல்லப்படுகிறது.
இதனால் நேற்று முதல் லியோ ஸ்கேம் என்னும் ஹேஷ் டாக் ட்விட்டரில் டிரண்டாகி வருகிறது. இதனால் விஜய் பயங்கர கடுப்பாக இருக்கிறார். இது போன்ற பொய்யான வசூல் தகவல்களை பரப்புவது படத்தின் தயாரிப்பாளர் லலித் தான் என நேற்றிலிருந்து செய்திகளும் வெளியாகி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே படத்திற்கு நெகடிவ் விமர்சனம் கிடைத்ததால் விஜய் பயங்கர டென்ஷனில் இருக்கிறாராம். இதில் தேவை இல்லாமல் இந்த வசூல் பிரச்சனை வேற ஏற்பட்டதால் தயாரிப்பாளர் லலித்தை அழைத்து விஜய் லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம்.
உங்க இஷ்டத்துக்கு எல்லாம் வசூல் விவரத்தை வெளியில் விடக்கூடாது என மிரட்டி விட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி திரையரங்க உரிமையாளர் ஒருவர் விஜய்யின் லியோ படத்தின் வசூல் குறித்து ஷாக்கிங் தகவல் கூறியுள்ளார். அதில் அவர் லியோ படத்தின் நிஜ வசூல் குறித்து சரியாக இல்லை, லலித் குமாரே தனக்கு தோன்றிய வசூலை கூறி வருகிறார். ஓவர்சீஸில் லலித்குமார் நிறைய பித்தலாட்டம் செய்கிறார்.
உதாரணத்துக்கு வெளிநாடுகளில் ரூ. 5 கோடி இவர்களே கொடுத்து டிக்கெட் வாங்கி அதை ரசிகர்கள் வாங்கி பார்த்தார்கள் என கணக்கு காட்டுகிறார். விஜய்யிடம் நல்ல பெயர் வாங்க, அவரின் அடுத்த படத்தை தயாரிக்க என இவரே நிறைய விஷயங்களை செய்கிறார் என கூறியுள்ளார். இந்நிலையில், லியோ படத்தின் வெற்றி விழா நவம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த விழாவில் விஜய்யும் கலந்துகொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்காக பாதுகாப்புக் கேட்டு லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக தான் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. அப்போது பெரியமேடு காவல் நிலையத்தில் மன்னிப்புக் கேட்டு லியோ படக்குழுவினர் கடிதம் கொடுத்திருந்தனர்.