இமான் தான் அந்த மாதிரி இடங்களுக்கு மனைவியை அனுப்பி வைத்தார்… சிவகார்த்திகேயன் சும்மா இருப்பாரா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவின் முன்னணி இசை இயக்குனரான இமான் தனது முதல் மனைவி மௌனிகா ரிச்சர்டை கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பிறகு, அமலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அதேபோன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இசையமைப்பாளர் இமான் கொடுத்த பாடல்கள் சிவகார்த்திகேயனை உச்சத்திற்கு கொண்டு சென்றதுடன்,

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அவரை பாடகராகவும் வலம் வர வைத்துள்ளது
இருவரும் அண்ணன் தம்பி போன்று இருந்துவந்த நிலையில், சமீபத்தில் இமான் பேட்டி ஒன்றில், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் இந்த ஜென்மத்தில் அவரை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இதன் பின்பு இமான் மற்றும் அவரது முதல் மௌனிகா பிரிவதற்கு காரணமே சிவகார்த்திகேயன் என்று கூறப்பட்டு வருகின்றது. ஆனால் இமானின் முன்னாள் மனைவி மோனிகா, சிவகார்த்திகேயன் எங்களை சேர்த்து வைப்பதற்கு தான் முயற்சி செய்தார்… அதனால் தான் இமான் இவ்வாறு குற்றச்சாட்டு வைக்கின்றார் என்று சிவகார்த்திகேயன் நல்லவர் வல்லவர் என புகழாரம் சூட்டினார்.

மோனிகாவின் இந்த விளக்கத்துக்கு பிறகு ஒருதரப்பினர் மௌனிகா இப்படி பேசுவதற்கு பின்னனியில் இருப்பதே சிவகார்த்திகேயன் தான் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். அதேசமயம் ஏன் இதில் மௌனம் காக்க வேண்டும். என்ன நடந்தது என்பதை ஓபனாக அவர் சொல்ல வேண்டியதுதானே என மற்றொரு தரப்பினர் கூறிவருகின்றனர். மேலும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பிடிக்காமல்தான் அவர் மேல் இப்படி கல் எறிகிறார்கள் என்று எஸ்கேவின் ரசிகர்களும் கோதாவில் குதித்தனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர் பாண்டியன் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் டி.இமான் – சிவகார்த்திகேயன் விவகாரம் குறித்து பேசியிருக்கும் விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்தப் பேட்டியில் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் ஒரு நைட் பார்ட்டி வைத்தார். அந்தப் பார்ட்டிக்கு இமானைத்தான் சிவகார்த்திகேயன் அழைத்திருந்தார். ஆனால் இமான் அந்த நேரத்தில் இசையமைப்பதில் பிஸியாக இருந்ததால் தன்னால் வரமுடியாது என்று கூறி மோனிகாவை அனுப்பி வைத்தார்.

சினிமாவில் இருப்பவருக்கு இரவு விருந்தில் என்ன நடக்கும் என்பது தெரியாதா?.. அப்படி தெரிந்தும் எதற்காக தன்னுடைய மனைவியை அனுப்பி வைக்க வேண்டும். அந்த நைட் பார்ட்டிக்கு போன இமானின் மனைவி அங்கு காணாமல் போய்விட்டார். குதிரை ஓடிய பிறகு லாயம் போட்டு என்ன பிரயோஜனம் என்பது போல் இமான் இப்போது பேசி என்ன பிரயோஜனம்” என தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த விவகாரம் இணையத்தில் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு இருக்கும் நிலையில், இதுகுறித்து சிவகார்த்திகேயன் வாயை திறக்காமல் அமைதியாக இருந்து வருவது மேலும் அவர் மீது தவறு இருப்பதால் தான் அமைதியாக இருந்து வருகிறார் ஏன் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மிகப்பெரிய பொருட் செலவில் உருவான அயலான் திரைப்படம் 2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் குறித்து அவரின் நடவடிக்கை குறித்தும் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும் செய்தியால் அது படத்தை பெரும் அளவு பாதிக்கும் என்ற பதற்றத்தில் படக்குழு உள்ளது.