விஜய்க்கு ஆப்பு வெச்ச விக்ரம் பிரபு… என்னடா இது விஜய் அண்ணாவுக்கு வந்த சோதனை..?

0
Follow on Google News

நடிகர் விஜய்யின் லியோ படம், பிரமாதமான ஓப்பனிங்கில் இருந்த நிலையில் தற்போது சரிவைச் சந்தித்து வருகிறது. படம் வெளியான இரண்டாவது வாரத்தில் நுழைந்து அதன் இரண்டாவது வெள்ளிக்கிழமை ரூ. 7 கோடியை ஈட்டியது. முதல் நாள் முடிவிலேயே ரூ. 148 கோடி வசூலித்த இப்படம் முதல் வார முடிவில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது. வரும் வார நாட்களில் பட வசூல் குறைந்திருந்தாலும் வார இறுதியில் வசூல் உயரும் என கூறப்படுகிறது,

இந்நிலையில் லியோ திரைப்படம் வெளியாகி ஒருவாரம் ஆனநிலையில், வரும் நவம்பரில் லியோ படம் ஓடிடியில் வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் லியோ படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளதால், வரும் நவம்பர் 17 ஆம் தேதி அல்லது 21 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லியோ திரைப்படம் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும் என தகவல் பரவி வருகின்றன.

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ எந்த தகவலும் நெட்ஃபிளிக்ஸ் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த லியோ படம் 2வது வாரத்திலேயே பல தியேட்டர்களில் காத்து வாங்கி வருவதாக ரஜினிகாந்த் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு நடிகர் விஜய்க்கு எதிராக நெகட்டிவிட்டியை பரப்பி பொளந்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல உட்லாண்ட்ஸ் திரையரங்கில் நேற்று முதல் விஜய்யின் லியோ படத்தை தூக்கிவிட்டு எம்ஜிஆர் நடித்த எவர்கீர்ன் ஹிட் ரிக்‌ஷாக்காரன் படத்தை போட்டு விட்டதாக சத்யன் ராமசாமி, மனோபாலா விஜயன் உள்ளிட்ட பலர் அந்த படத்தின் போஸ்டர் மற்றும் டிக்கெட் புக்கிங் நிலவரத்தை வெளியிட்டு விஜய் ரசிகர்களை விடாமல் வம்பிழுத்து வருகின்றனர்.

இந்த போஸ்ட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள விஜய் ரசிகர்கள் லியோ படம் அந்த தியேட்டரில் இன்னமும் ஓடுகிறது. ஆனால், மாலை 6.30 மற்றும் இரவு 10.30 காட்சிக்குத் தான் ரிக்‌ஷாக்காரன் போட்டுள்ளனர் என ஆதாரத்துடன் பதிலடி கொடுக்க ஸ்க்ரீன் ஷாட்களை ஷேர் செய்து வர, இரண்டாம் வாரத்திலேயே லியோ படத்திற்கு கூட்டம் வரவில்லை என்பதால் தான் அந்த இரண்டு ஸ்க்ரீன்களிலும் படத்தை மாற்றி விட்டு புதிய படம் ரிலீஸ் இல்லை என்பதால் எம்ஜிஆர் படத்தை போட்டாவது சம்பாதிக்கலாம் என உட்லாண்ட்ஸ் தியேட்டர் நினைத்து விட்டதே ஐயோ பாவம் என மீண்டும் அசிங்கப்படுத்தி வருகின்றனர்

இந்நிலையில் விஜய்க்கு விக்ரம் பிரபுவும் ஆப்பு வைத்துள்ளார். விக்ரம் பிரபு நடிப்பில் இந்தாண்டு தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வருகிறது. பொன்னியின் செல்வன் 2, பாயும் ஒளி நீ எனக்கு மற்றும் இறுகப்பற்று. சமீபத்தில் வெளியான இறுகப்பற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் முத்தையா வசனத்தில், ரெய்டு என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார்.

கனிஷ்க் மற்றும் மணிகண்ணன் தயாரிக்கும் இப்படத்தை கார்த்தி என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடத் திட்டமிட்டது. சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என போஸ்டர் ரிலீஸாகியுள்ளது.

குடும்ப பார்வையாளர்கள் மற்றும் சினிமா விரும்பிகளுக்கு ஏற்ற வகையில், அனைத்தும் இந்தப் படத்தில் இருப்பதால் நிச்சயம் தீபாவளி விடுமுறைக்கு இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். இருக்கை நுனியில் அமரும்படியான ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ‘ரெய்டு’ உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி லியோ ட்ரெய்லர் வெளியிட்டால் தும்சமான ரோகினி திரையரங்கில் தீபாவளி அன்று ரெய்டு படம் போட உள்ளனர்.

இதனால் லியோ படத்திற்கு ஆப்பு கன்ஃபார்ம் ஆகி உள்ளது. ஏற்கனவே தீபாவளி ரேசில் கார்த்தி – ராஜு முருகன் கூட்டணியில் உருவாகும் ஜப்பான், கார்த்திக் சுப்புராஜ் – ராகவா லாரன்ஸ் கூட்டணியில் உருவாகும் ஜிகர்தண்டா 2 உள்ளிட்ட படங்கள் இருக்கும் நிலையில் தற்போது விக்ரம் பிரபு படமும் இணைந்துள்ளது. இதனால் லியோ படத்தின் வசூல் பாதிப்படையும் என்றும் கூறப்படுகிறது.