என்னை பார்த்து நாக்கை துருத்துறியா.? விஜயகாந்த் தை காலி செய்ய செயலலிதா செய்த சதி..

0
Follow on Google News

நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் அவர்கள் உடல்நிலை சரி இல்லாமல் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் விஜயகாந்தின் மறைவு அவரது குடும்பத்தையும், கட்சித் தொண்டர்களையும், திரையுலகினரையும் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

முதலில் 2005 இல் கட்சி தொடங்கிய கேப்டன் விஜயகாந்த், 2006 இல் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேமுதிக கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதால், திமுக கட்சியை ஓரங்கட்டிய தேமுதிக கட்சி எதிர்க்கட்சி ஆக அந்தஸ்து பெற்றது. அரசியலில் குதித்து வெகு சீக்கிரமாகவே எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றவர் என்ற பெருமை கேப்டன் அவர்களையே சாரும்.

2006 சட்டசபை தேர்தலின் போது தனித்து போட்டியிட்டது போன்று 2011 தேர்தலிலும் விஜயகாந்த கூட்டணியில்லாமல் போட்டியிட்டு இருந்தால், ஜெயலலிதா முதல்வராக வந்திருப்பாரா.? என்பதே சந்தேகம் தான், அதிமுக கட்சி நிர்வாகி முதல் தொண்டர்கள் வரை, ஏன் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட ஜெயலலிதாவுக்கு குனிந்து கும்பிடு போட்டாலும், கேப்டன் அதிமுக கூட்டணியில் இருந்தாலும் தன்னுடைய கெத்தை விட்டு கொடுக்காமல், ஜெயலலிதாவுக்கு சரிக்கு சமமாக அமர்ந்து பேசி தன்மானத்தை விட்டு கொடுக்காமல் அரசியல் செய்து வந்தவர்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அதிமுக அரசின் மக்கள் விரோத போக்கையும், விலைவாசி உயர்வையும் சற்றும் யோசிக்காமல் தட்டி கேட்க கூடியவர் விஜயகாந்த், இந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையில், பால் மற்றும் மின்சார கட்டண உயர்வு குறித்து தேமுதிக எம்எல்ஏவாக இருந்த சந்திரகுமார் தான் இந்த கேள்வியை எழுப்பினார். மேலும், இந்தக் கேள்விக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்தே ஆக வேண்டும் என்று தேமுதிக கட்சியினர் குரல் எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, “இந்த கேள்விகளுக்கு பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது” என்று கூறி முற்றுப்புள்ளி வைக்க முயன்றார். இருப்பினும் விடாத எம்எல்ஏ சந்திரகுமார் “உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகவே இந்த விலை ஏற்றத்தை செய்திருக்கலாமே!ஏன் அப்போது செய்யாமல் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இப்படி செய்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயலலிதா “விலைவாசி உயர்வுக்குப் பிறகுதான் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரப்போகிறது. அந்தத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் அதிமுக தனித்து நின்று அமோக வெற்றி பெறும். உங்களால் முடிந்தால் தனித்து நின்று வெற்றி பெற்றுப் பாருங்கள்” என்று தேமுதிக கட்சியினருக்கு நேரடியாக சவால் விடுத்தார்.

அதுவரை அமைதியாக இருந்த விஜய்காந்த் “ஆளும் கட்சி எப்படி இடைத்தேர்தலில் வெற்றி பெறும் என்பது எங்களுக்கு தெரியும்” இதற்கு முன் நடந்த இடைதேர்தலில் ஏன் தோல்வி அடைந்தீர்கள் என நேரடியாக ஜெயலலிதாவை பார்த்து விஜயகாந்த் கேள்வி கேட்க திக்குமுக்காடி போனது சட்டமன்றம். இப்படி ஜெயலலிதா உடன் நேரடி வாக்குவாதத்தில் விஜயகாந்த ஈடுபட்டிக்கொண்டிருந்த போது, ஜெயலலிதாவுக்கு முதுகை வளைத்து கும்பிடு போடும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விஜகாந்த்தை பார்த்து கூச்சலிட.

ஒரு இரும்பு பெண்மணியின் கோட்டைக்குள் புகுந்து கர்ஜிக்கும் சிங்கம் போல் எழுந்து நாக்கை மடக்கி விஜயகாந்த் விடுத்த எச்சரிக்கை, ஜெயலலிதா வாழ்க்கையிலே தனக்கு நேரெதிராக இப்படி ஒரு சிங்கம் சவால் விடுத்து கர்ஜிப்பதை நிச்சயம் பார்த்திருக்க மாட்டார் என்றே சொல்லலாம், இந்த நிகழ்வுக்கு பின்பு திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் விஜயகாந்துக்கு எதிர்க்க அவர்களுடன் சில மீடியாக்கள் செய்த செயலால் தான் விஜயகாந்த் என்கிற நல்ல குணம் படைத்த விஜயகாந்த் அரசியலில் இருந்து சரிவை சந்திக்க காரணமாக இருந்தது என கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..