நடிகர் விஜயின் குடும்பத்தை வாழ வைத்தவர் கேப்டன் விஜயகாந்த் என்று சொல்லும் அளவிற்கு பல உதவிகளை விஜய் குடும்பத்தினருக்கு செய்தவர் விஜயகாந்த். நடிகர் விஜயை ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த அவருடைய தந்தை இயக்குனர் எஸ் எஸ் சந்திரசேகர் முயற்சி செய்தபோது, விஜயை வைத்து எந்த ஒரு முன்னணி இயக்குனர்களும் படம் எடுக்க விரும்பவில்லை.
அன்றைக்கு மிகப்பெரிய உச்சத்தில் இருந்த இயக்குனர் பாரதிராஜாவிடம் தன்னுடைய மகன் விஜய்க்கு சான்ஸ் கேட்டு எஸ் ஏ சந்திரசேகர் சென்ற போது, இவரை வைத்து என்ன படம் எடுக்க முடியும் என்று மறுத்துவிட்டார் பாரதிராஜா. இதனைத் தொடர்ந்து யாரும் தன்னுடைய மகனை வைத்து படம் எடுக்க முன் வராததால். எஸ்.ஏ சந்திரசேகர் தன்னுடைய சொந்த பணத்தை போட்டு விஜயை வைத்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாம் செய்து தொடர்ந்து பல படங்களை இயக்கினார்.
ஆனால் விஜய் நடித்த அனைத்து படங்களுமே படுதோல்வியை சந்தித்த நிலையில், அன்று ரஜினி கமலுக்கு இணையாக மிகப்பெரிய உச்சத்தில் இருந்தவர் நடிகர் விஜயகாந்தை சந்தித்து, தன்னுடைய மகனை வைத்து படம் எடுத்து பெரும் நஷ்டத்தை சந்தித்து கடனாளியாக உள்ளேன் என தெரிவித்த எஸ் ஏ சந்திரசேகர், நீங்கள் இருக்கும் உயரத்துக்கு என்னுடைய மகனுடன் இணைந்து நீங்கள் ஒரு படம் நடித்தால் என்னுடைய மகனும் மக்கள் மத்தியில் ஒரு நடிகனாக ரீச் ஆகுவார்.
மேலும் அந்த படம் வெற்றி அடைந்தால் தான் தற்பொழுது தத்தளித்து வரும் கடன் சுமையும் குறையும் என கேட்க, விஜயகாந்த் சற்றும் யோசிக்காமல் எப்ப நடிக்கணும் என்று சொல்லுங்க, தம்பி விஜய்க்காக இது கூட நான் செய்ய மாட்டேனா என்று சொல்லி செந்தூரப்பாண்டி படத்தின் மூலம் விஜய்யுடன் இணைந்து விஜயகாந்த் நடித்த பின்பு தான் விஜய் என்கிற ஒரு நடிகன் தமிழ் சினிமாவில் இருப்பது மக்களுக்கு தெரிய வந்தது.
செந்தூரப்பாண்டி படத்தின் மூலம் விஜய்க்கு நடிகனாக அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த விஜயின் குடும்பத்தை காப்பாற்றியவர் விஜயகாந்த். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வந்த நிலையில், மிக பெரிய உச்சத்தில் இருக்கக்கூடிய ரஜினிகாந்த் போன்ற பல நடிகர்கள் விஜயகாந்த் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து வந்தனர்.
ஆனால் விஜய்க்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்தது மட்டுமல்லாமல் தன்னுடைய குடும்பத்தையே கடனிலிருந்து காப்பாற்றிய விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ஒரு முறை கூட நேரில் சென்று விஜய்காந்த் உடல்நலம் குறித்து விஜய் விசாரிக்கவில்லை. இதனால் சினிமா துறையில் மட்டுமில்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் விஜய் மீது கடும் விமர்சனம் எழுந்தது. நன்றி இல்லாதமனிதர் என்று உதாரணம் காட்ட வேண்டும் என்றால் அதை விஜய்தான் காட்ட வேண்டும் என்று பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் விஜய்காந்து மறைவுக்கு சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் விஜயகாந்த் இருந்தபோது கூட விஜய் அவரை மருத்துவமனைக்குச் சென்று எட்டிக் கூட பார்க்கவில்லை விஜய். இப்படி விஜயகாந்த் உடல்நலம் சரியில்லாமல் இருந்தது தொடங்கி மரணம் அடையும் வரை ஒரு முறை கூட எட்டி பார்க்காத விஜய், கேப்டன் மரணம் அடைந்த பின்பாவது இறுதி மரியாதை செலுத்த வருவாரா நன்றி மறந்த விஜய் என மக்கள் கழுவி கழுவி விஜயை ஊத்தி வந்த நிலையில்.
விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருந்த தேமுதிக அலுவலகத்திற்கு வந்து விஜய் மரியாதை செலுத்தியதை பார்த்த பலரும், உயிரோடு உடல்நலம் இல்லாமல் இருந்த போது எட்டி கூட பார்க்காத விஜய், இறந்த பின்பு வந்து மாலை போடுவது விஜயகாந்துக்கு தெரியவா போகுது என்றும், இப்படியும் நன்றி இல்லாத மனிதர்கள் வாழ்ந்த பூமியில் வள்ளலாக வாழ்ந்து மறைந்து விட்டாயே கேப்டன் என விஜய் அஞ்சலி செலுத்தி கொண்டிருந்த அதே இடத்தில் மக்கள் கண்கலங்கி விஜயை விமர்சித்ததை பார்க்க முடிந்தது. இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.