கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் அவருடைய மனைவியை சங்கீதாவை பிரிந்து சென்னையில் வாழ்ந்து வருவதாகவும், அதேபோன்று சங்கீதா அவருடைய கணவரை பிரிந்து லண்டனில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படும் நிலையில், இதற்கு காரணம் நடிகை திரிஷாவுடன் விஜய்க்கு ஏற்பட்ட நெருக்கம் தான் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா விஜய் நடிக்கும் அனைத்து படங்களின் ப்ரோமோஷனிலும் கலந்து கொள்வார்.
அதேபோன்று சினிமா துறையைச் சேர்ந்தவர்களின் எந்த ஒரு திருமண நிகழ்வாக இருந்தாலும், நடிகர் விஜய் அவருடைய மனைவி சங்கீதாவுடன் தான் ஜோடியாக சேர்ந்து கலந்து கொள்வார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் எந்த ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியிலும் சங்கீதா கலந்து கொள்வதில்லை. அதே போன்று சினிமா துறையைச் சார்ந்தவர்களின் சுப நிகழ்ச்சிகளில் நடிகர் விஜய் தனியாகத்தான் சென்று கலந்து கொள்கிறார்.

அதாவது கடந்த இரண்டு வருடங்களாக விஜயும் சங்கீதாவும் ஜோடியாக எந்த ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளாமல் இருக்கும் சூழலில், சங்கீதாவுக்கும் விஜய்க்கும் இடையில் என்ன ஆனது என்கின்ற குழப்பம் ஒரு பக்கம் நீடித்து வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் திரிஷாவுடன் விஜய் ஜோடியாக சுற்றி வருவது நாளுக்கு நாள் எல்லை மீறி கொண்டிருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் விஜயின் மகன் சஞ்சய் தற்பொழுது அவருடைய அம்மா சங்கீதா உடன் இருந்து வருவதாகவும், சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக சஞ்சய் தன்னுடைய தந்தையின் தயவே இல்லாமல் தன்னுடைய தாய் சிபாரிசில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுகமாக இருக்கிறார். மகன் இயக்கும் முதல் படத்தின் எந்த ஒரு நிகழ்விலும் விஜய் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம், விஜய் மீது மகன் சஞ்சய்க்கு இருக்கும் வெறுப்பு தான் என கூறப்படுகிறது.
இப்படி விஜய் குறித்து, விஜய் சக நடிகையான திரிஷாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார், அதனால தான் அவருடைய மனைவி சங்கீதா விஜய்யை விட்டு பிரிந்து குடும்பத்துடன் லண்டனில் இருந்து வருகிறார், இருந்தாலும் விஜய் மனைவியை சமாதனம் செய்யும் முயற்சியில் ஈடுபடவில்லை, மேலும் மனைவியை விட்டு பிரிந்த விஜய் புதிய அலுவலகம் இருக்கும் அதே அப்பார்மெண்டில் நடிகை திரிஷா வும் புதிய வீடு வாங்கி குடியியேறியுள்ளார்.
இப்படியெல்லாம் ரெக்கை கட்டி செய்திகள் வெளியான நிலையில், விஜய் தரப்பில் இருந்தும் சங்கீதா தரப்பில் இருந்தும் இது குறித்து மறுப்பு தெரிவித்து எந்த விளக்கமும் தரவில்லை, இந்நிலையில் தனது மனைவி சங்கீத குறித்து விஜய் சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று தற்பொழுது ட்ரெண்டாகியிருக்கிற்து. அந்தப் பேட்டியில் விஜய் பேசுகையில்,
“எனது அம்மாவுக்கு ஒரு ரசிகை கடிதம் எழுதினார். அதில், ‘உங்களுடன் சேர்ந்து உங்கள் வீட்டு கிச்சனில் சமைக்க வேண்டும் என்று ஆசை’ என சொல்லியிருந்தார். அவர் வேறு யாருமில்லை எனது மனைவி சங்கீதாதான். அதேபோல் எனக்கு நிறைய ரசிகைகள் மெயில், லெட்டர் போடுவதாக மிரட்டியிருக்கிறேன். ஆனால் எனக்கு வேறு யாரும் செட் ஆகமாட்டாங்க என்று சங்கீதாவுக்கு தெரியும். அந்த நம்பிக்கை நிறையவே அவரிடம் இருக்கிறது. அதனால் அவரைப் பொறுத்தவரை அந்த பயம் எல்லாம் இல்லை” என்று ஜாலியாக விஜய் இதற்கு முன்பு பேசிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.