இவருக்கு பின்னால் இப்படி ஒரு சோகமா.? அறந்தாங்கி நிஷாவின் கண் கலங்க வைக்கும் சோகம்…

0
Follow on Google News

சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து, காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக்கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா.

காமெடியை தாண்டி நிஷா அடிக்கடி பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார், அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையை திருப்பி போட்ட நிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்திருந்தார். இப்படி பிரபலமான அறந்தாங்கி நிஷாவின் ஆரம்ப காலம் அவ்வளவு எளிமையானதாக இல்லையாம். அதனாலயே அறந்தாங்கி நிஷா தன்னுடைய வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய அப்பா மற்றும் தன்னுடைய கிராமத்தைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அப்பாவின் வீடியோவை அறந்தாங்கி நிஷா காட்டி, அப்போது பேசிய இவர், இப்போது இந்த வீடு பெரிய அளவில் இருந்தாலும் ஆரம்பத்தில் ஓட்டு வீடாகத்தான் இருந்தது. நான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வரைக்கும் அந்த வீடு ஓட்டு வீடாகத்தான் இருந்தது. எங்கள் குடும்பத்திற்கு இந்த வீட்டைத் தவிர வேறு எந்த சொத்துக்களும் கிடையாது. வீட்டில் ஆடு, மாடுகள் இருக்கும். ஆடுகளை வளர்த்து தான் அப்பா என்னையும் தம்பியையும் வளர்த்தார்.

என் அப்பா கறிக்கடை போட்டு இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே பொம்பள பிள்ளையை எதற்கு இவ்வளவு படிக்க வைக்கிறீங்க என்று ஊரெல்லாம் கேட்டாலும் என் அப்பா இல்லை என் பொண்ணு படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும் என்று என்னை படிக்க வைத்தார். என்னை எந்த விஷயத்திற்கும் அப்பா தடுத்தது கிடையாதாது. ஆனால் அப்பா இது வேண்டாம் என்று சொன்னால் அதை நான் செய்ய மாட்டேன்.

அதனாலேயே தந்தைக்காக தான் வேலைக்கு போகாமல் இரண்டு வருடமாக வீட்டில் இருந்தேன். பிறகு குழந்தை பிறந்த பிறகுதான் இவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.” என்றார். மேலும் பேசிய அவர், “அப்பா நான் வளர்ச்சி அடைவதை பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டு இருந்தார். முதல் முறையா நான் டிவி சேனலில் வந்த போது எங்க அப்பா ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அங்கு டிவி வைத்து எல்லாரையும் பார்க்க சொல்லி இருக்காரு.

எல்லோரும் மண்டபத்தில் டிவி வைத்து என்னுடைய நிகழ்ச்சியை பார்த்து இருக்காங்க. அப்பாவுக்கு அவ்வளவு சந்தோஷம் என்று தன்னுடைய தந்தையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அறந்தாங்கி நிஷா தன்னுடைய அன்பை வெளிக்காட்ட அப்போது அவருடைய தந்தை கண் கலங்கி கொண்டிருக்கிறார். அதோடு என்னுடைய உலகம் எப்போதுமே எங்க அப்பா தான். அதற்கு பிறகு தான் என்னுடைய கணவர் கூட..

இப்ப கூட எங்க அப்பா நீ எந்த ப்ரோக்ராமுக்கும் போக கூடாதுன்னு சொன்னா நான் வீட்டிலேயே இருந்து விடுவேன். வெளியே என்னை பற்றி எவ்வளவோ நெகட்டிவ் கமெண்ட்கள் வருகிறது அதைப்பற்றி நான் கவலைப்படாததற்கு காரணமே என்னுடைய அப்பா தான். என்னை தடை செய்வதற்கோ என்னை பற்றி நெகட்டிவா பேசுறதுக்கும் எங்க அப்பாவுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. அவரே என்னை நம்பி எனக்கு ஆதரவு தரும்போது நான் எதற்கு அடுத்தவர்களை பற்றி கவலைப்பட வேண்டும் என்று அறந்தாங்கி நிஷா உருக்கமாக பேசியது பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துள்ளது.