மாயாவுக்கும் கமல்ஹாசனுக்கும் உள்ள தொடர்பு பற்றி பங்கமாய் கலாய்த்த விஜய் டிவி பிரபலம்…

0
Follow on Google News

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்றைய தினம் நடைபெறவுள்ளது. பிக்பாஸ் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு போட்டியாளர்கள் இடையில் அளவுக்கு அதிகமாக வன்மமும், சண்டைகளும் அரங்கேறின. இரண்டு குறிப்பாக செயல்படுவது அல்லது குரூப்பாக சேர்ந்து ஒரு போட்டியாளரை டார்கெட் செய்வது போன்ற சம்பவங்கள் இந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடந்தன.

குறிப்பாக இறுதி வாரத்தில் கூட போட்டியாளர்கள் இடையே சண்டை நடந்தது பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனிடையில் இந்த சீசனில் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் கமலின் செயல்பாடுகளும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. மாயா கேங்கிற்கு ஆதரவாக அவர் செயல்படுவதாகவும் ஒரு சாரர் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் கமலே கடுப்பாகி போட்டியாளர்களிடம் உங்க கேமுக்குள்ள என்னையும் ஒரு ஆளா கொண்டு வராதீங்க என காட்டமாக தெரிவித்திருந்தார்.

மாயா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த லியோ படத்தில் சில காட்சியில் நடித்திருந்தார். இந்த சீசனில் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரு போட்டியாளர்கள் என்றால் அதில் டாப் மூன்று இடத்தில் மாயாவிற்கு தான் முதலிடம். இவர் பல முறை நாமினினேட் ஆன போது இவர் நிட்சயம் வெளியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஒவ்வொரு வாரமும் இவர் தப்பித்துக்கொண்டே வந்து தற்போது இறுதி கட்டம் வரை வந்துவிட்டார். மாயா இப்படி இறுதி வரை வர காரணம் கமல் தான் என்று சமூக வலைதளத்தில் அடிக்கடி கமல் கேலிக்கு உள்ளானார். இப்படி ஒரு நிலையில் மாயாவிற்கு கமல் எந்த அளவிற்கு ஆதரவு தெரிவித்து வருவதை கலாய்க்கும் விதமாக சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் புகழும் குரேஷியும் கலாய்த்து உள்ளனர். இதில் குரேஷி கமல் போல் மிமிக்கிரி செய்ய, புகழ் ஒவ்வொரு கேள்வியாக கேட்கிறார்.

அதில், “சென்னையில் பிடிச்ச இடம்? மாயாஜால், புடிச்ச படம்? மாயா பஜார், தமிழ்நாட்டில் புடிச்ச இடம்? மாயா வரம் என மாயாவை வைத்து கமல் பதில் சொல்வது போல குரேஷி தெரிவித்திருப்பார். அது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் எப்போதும் சொல்லும் டயலாகான “நான் அனைவருக்கும் ஒரே மாதிரிதான்” என்பதையும் கூறி அங்கே உட்கார்ந்திருந்த மக்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். இந்த வீடியோதான் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்களும் மக்களும் விஜய் டிவியில் இருக்கும் உங்களுக்கே இப்படித்தான் தோன்றுகிறதா ? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க னேகமாக இதுதான் கமலுடைய கடைசி சீசன் என்று நம்பகத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான அடுத்த தொகுப்பாளரை தேடும் வேட்டையில் விஜய் டிவி இறங்கிவிட்டது. தற்போது வரை 5 பிரபலங்களிடம் விஜய் டிவி சேனல் தரப்பில் இருந்து பேசப்பட்டிருக்கிறது.

அதில், பிக் பாஸ் ஓ டிடி யில் வெளியாகியிருந்தபோது கமலுக்கு பதில் தொகுப்பாளராக இருந்தவர் சிம்பு. அவர் சிறப்பாக கொடுத்திருந்தார். கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமான ஆக்சன் கிங் அர்ஜுன் நடிகர் சரத்குமார் மாதவன் ஆகியோரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கிராண்ட் பினாலே இன்று நடக்கிறது. அந்த வகையில் இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் வாக்குகளின் அடிப்படையில் அதிரடியான மாற்றம் நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக அர்ச்சனா தேர்வாகி இருப்பதாகவும் அவரை தொடர்ந்து ரன்னராக மணி தேர்வாகி இருப்பதாகவும் மூன்றாவது இடத்தில் மாயா இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.