நடிகர் விஜய் நடிப்பில்,, பிரபல தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில்ராஜ் தயாரிப்பில் பொங்கல் என்று வெளியாக இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படம் வெளியாகும் அதே நாளில் அஜித் நடிக்கும் துணிவு படமும் வெளியாகிறது துணிவு. அஜித் நடிக்கும் துணிவு படத்தின் தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் வாங்கியுள்ளது.
இதேபோன்று வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை வாங்குவதற்கு ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் முயற்சி செய்து வந்தது, ஆனால் உதயநிதி ஸ்டாலின் உடன் ஏற்கனவே விஜய்யுடன் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய படத்தை எந்த ஒரு காரணத்திற்காகவும் உதயநிதி ஸ்டாலினிடம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை விற்பனை செய்யக்கூடாது என தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரபல தயாரிப்பாளர் லலித்தை நேரில் அழைத்து வாரிசு படத்தின் தமிழ்நாடு உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் துணிவு படத்தின் விற்பனை படு ஜோராக நடந்து வரும் நிலையில், விஜய் நடிக்கும் வாரிசு படத்தை வாங்குவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் முன் வரவில்லை. உதயநிதி ஸ்டாலின் மூலம் வந்தால் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம், உங்களிடம் நேரடியாக இந்த படத்தை வாங்க முடியாது என லலித்திடம் பல திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வாரிசு படத்தை மிகக் குறைந்த திரையரங்குகளில் வெளியிட்டால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும் ஆகையால், விஜய்க்கும் உதயநிதிக்கும் பிரச்சனை என்றால் அதனால் ஏற்படும் நஷ்டத்தை யார் சரி செய்து கொள்வது.? விஜய் அவருடைய சம்பளத்தை குறைத்துக் கொள்வாரா.? என்று செம்ம டென்ஷனில் இருக்கும் வாரிசு படத்தின் தயாரிப்பாளர். உதயநிதியின் உதவியை நாடியுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆனால், பெரும்பாலும் துணிவு படத்தின் வியாபாரத்தில் தொடங்கி பல திரையரங்குகளில் விற்பனை செய்து முடித்துள்ளதால், இனி வாரிசு படத்தை வாங்கி பெரும்பாலான திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு தான், நீங்கள் மிகவும் தாமதப்படுத்தி விட்டீர்கள் என்று ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் கைவிரித்து விட்டதாம். இதனால் பொங்கல் அன்று வெளியிடாமல் வேறு ஒரு தேதியில் வாரிசு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.