நடிகர் சூர்யா மற்றும் வன்னிய சமூகத்துக்கு இடையிலான பிரச்சனை உச்சக்கட்டம் அடைந்துள்ளது. சமீபத்தில் சூர்யா நடிப்பில், அவரது சொந்த தயாரிப்பில் வெளியான படம் ஜெய்பீம், இந்த படத்தில் வன்னிய சமூகத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இதற்கு வன்னிய சமூகத்தினர் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பிய நிலையில், சர்ச்சை கூறிய சில காட்சிகள் மாற்றியமைக்க பட்டது.
இதன் பின்பு பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஜெய்பீம் படம் குறித்து சில கேள்விகளை முன்வைத்து நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் நடிகர் சூர்யா தான் செய்த தவறை நியப்படுத்தும் விதத்தில் அன்புமணி ராமதாஸ் க்கு பதிலளித்தவர், மேலும் அன்புமணி எழுப்பிய ஒரு கேள்விக்கு கூட பதில் தெரிவிக்கவில்லை. சூர்யாவின் இந்த ஆணவ போக்கு மேலும் வன்னிய சமுகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும் வன்னிய சமூகத்துக்கு ஆதரவாக கவுன்டர் சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வந்ததை தொடர்ந்து, சூர்யா அவர் சார்ந்த கவுண்டர் சமூகமும் அவருக்கு இந்த விவகாரத்தில் ஆதரவாக இல்லாமல். வன்னிய சமூக மக்களின் நியாயத்தின் பக்கம் நின்றது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா மீது தாக்குதல் நடத்தினால் ஒரு லட்சம் அன்பளிப்பு வழங்க படும் என பாமக நிர்வாகி ஒருவர் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் ஞானவேலு உள்ளிட்டோரிடம் 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வன்னியர் சங்க மாநிலத் தலைவர் அருள்மொழி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள நோட்டீஸில், ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் வேண்டுமென்றே சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும், படத்தில் வன்னியர் சமூகத்தினர் தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக நடிகர் சூர்யா உள்ளிட்டோர், நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்காவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும், நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் ஞானவேலு உள்ளிட்டோர், 7 நாட்களுக்குள், வன்னியர் சங்கத்தினருக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு உள்ளதால் தற்போது நடிகர் சூர்யா மற்றும் வன்னியர்களுக்கு இடையிலான மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ளது.