அஜித் பற்றி மனம் திறக்கும் வலிமை பட வில்லன்… வலிமை படம் கதை குறித்து வெளியான ரகசியம்…

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிக்கும் வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் கார்த்திகேயா வலிமை படம் குறித்து ஊடகத்திற்கு பகிர்ந்துள்ளார். இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்து முடித்து வெளி வர இருக்கும் படம் ‘வலிமை’. பாலிவுட்டை சேர்ந்த நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

யுவனின் இசையில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா அஜித்திற்கு வில்லனாக நடித்திருக்கிறார். ‘வலிமை’ படம் 2022 பொங்கலுக்கு வர உள்ள நிலையில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்துள்ளார். ஊடகத்தில் பேசிய நடிகர் கார்த்திகேயா “முதல் முதலில் நடிகர் அஜித் சாருடன் நடிக்கும் வாய்ப்பை கிடைத்தது நினைத்து அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.

மேலும் இயக்குனர் எச்.வினோத் மற்றும் அஜித் சார் முதலில் என்னைத் தெரிந்திருக்குமா என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள். நான் தெலுங்கு நடிகர். நடிகர் கார்த்திகேயா வலிமை படம் குறித்து மனம் திறந்து ஒரு உண்மையை கூறியுள்ளார். வலிமை படம் பைக் ரைடிங் படமாக இருக்காது. படத்தில் பைக் சேசிங் காட்சிகள் மட்டுமே உள்ளன. வலிமை படம் ஒரு வித்தியாசமான ஆக்‌ஷன் திரைப்படம்.

வலிமை படத்திற்கான படப்பிடிப்பு செட்டில் நான் முதலில் அஜித் சாரை சந்தித்தபோது அவரிடம் என்ன பேசுவது சொல்வது என்று தெரியவில்லை. ஏன் பக்கத்தில் இருக்கும் இவ்வளவு பெரிய நடிகரிடம் எப்படி அணுகுவது, பல சிந்தனை ஓடியது. ஆனால் அஜித் சார் சிறப்பு, படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரையும் அவர் எப்படி உணர வைக்கிறார் என்பதுதான் முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது.

அஜித் சார் என்னிடம் பேசி பழகிய விதம் மற்றும் வில்லன அல்லது நானே படத்தின் ஹீரோவா என உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு நடந்து கொண்டார். அஜித் சார் படப்பிடிப்புக்கு வந்ததுமே முதலில் அனைத்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களையும் வாழ்த்தி, எல்லோரிடமும் முக்கிய விஷயங்களைச் பகிர்ந்து, மொத்த டீமையும் முக்கியமானதாக அனைவரையும் உணர வைப்பார்.

இதான் மூலம் படப்பிடிப்பில் உள்ள அனைவருக்கும் உரிமையுணர்வைக் கொடுக்கிறார். இதனால் அவர்களுக்கு படத்திற்கு தங்களால் இயன்றதைத் தர முடிகிறது. ஒரு நேர்மையான ஒரு நல்ல மனிதராக இருப்பதைக் அஜித் சாரிடம் இருந்து கற்றுக்கொண்டதாக வலிமை படத்தின் வில்லன் கார்த்திகேயா கூறியுள்ளார். நடிகர் அஜித் ரசிகர்களுக்கு தெலுங்கு நடிகர் பாராட்டியதை சமூக வலைத்தளங்களில் ஜபகிர்ந்து வருகின்றனர்.