வெற்றிமாறன் இயக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படதின் படப்பிடிப்பு 2025 ஏப்ரலில் உறுதியாக தொடங்கப்படும் என திட்டமிட்டுள்ளது படக்குழுவினர். அந்த வகையில் கிட்டத்தட்ட படப்பிடிப்பை உறுதி செய்துள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது, ஜல்லிக்கட்டு குறித்த கதை தான் இந்த படத்தின் மைய கதை என்றாலும் கூட, ஜல்லிக்கட்டு சுற்றி நடக்கும் அரசியல் இதையெல்லாம் பேசுகின்ற ஒரு படமாக தான் வாடிவாசல் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஒரு ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் போது, அதற்குள் நடக்கும் அரசியல், மாடு பிடிப்பதில் முதல், மாடு விடுகின்றவர்கள் வரை இவர்களுக்குள் நடக்கும் அரசியல் தான் படத்தின் கதை என கூறப்படுகிறது.மேலும் வாடிவாசல் திரைப்படம் மூன்று பாட்டாக எடுக்க வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பக்காவான பிளானும் போட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதாவது படத்தை தொடங்கிய பின்பு படத்தின் கதை நீளமாக உள்ளது என்பதற்காக இரண்டு பாகமாக உடைத்து, விடுதலை ஒன்று விடுதலை இரண்டு என்று வெளியிட்டது போன்று படப்பிடிப்பு தொடங்கிய பின்பு எந்த ஒரு குழப்பமும் இருக்கக் கூடாது என்பதற்காக, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே மூன்று பார்ட்டாக வாடி வாசலை எடுக்க பக்காவா திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் விடுதலை படம் தொடங்கி அது வெளியாவதற்கு நாட்கள் பல ஆனது, அதில் படம் நீளமாக உள்ளது என்பதற்காக இரண்டு பார்ட்டாக வெளியிட்டார்கள், குறிப்பாக விடுதலை படத்தில் நடித்த நடிகர்கள், எப்படா வெற்றிமாறனிடம் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும் என்கிற நிலைக்கு சென்றனர், அந்த அளவுக்கு விடுதலை படம் வருஷ கணக்கில் எடுத்தார் வெற்றிமாறன்.
அப்படி இருக்கும் பொழுது வாடிவாசல் படத்தை மூன்று பார்ட்டாக வெற்றிமாறன் எடுக்கிறார் என்றால், அது எத்தனை வருடங்கள் ஆகும் என்கின்ற குழப்பத்திற்கெல்லாம் விடை கொடுக்கும் வகையில், விடுதலை போன்று படப்பிடிப்பு தளத்தில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல், மிகக் குறுகிய காலத்தில் மூன்று பார்ட்டாக வாடிவாசல் எடுக்க திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன் என கூறப்படுகிறது.
குறிப்பாக மாடுகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்சி அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது, இதற்காகத்தான் அடிக்கடி வெற்றிமாறன் லண்டன் சென்று வருவதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் அப்படி வாடிவாசல் படத்தில் தொழில்நுட்பத்தை வைத்து எடுக்க வேண்டிய பல காட்சிகள் வடிவமைக்கப்பட்டு விட்டதாகவே கூறப்படுகிறது.
அந்த வகையில் தொழில் நுட்ப உதவியுடன் காளைகள் சம்பந்தமான காட்சிகள் பார்ப்பவர்களுக்கும் தத்ரூபமாக இருக்கும் வகையில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது திட்டமிட்டபடி மிகக் குறுகிய காலத்தில் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை எடுத்து முடிப்பார் என்கிற நம்பிக்கையில் வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் இருப்பதாக கூறப்படுகிறது, இது எந்த விதத்தில் சாத்தியம் என்பது உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.