விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் திரைப்படத்தின் உதவி இயக்குனராக இருந்தவர் பினு சுப்பிரமணி, இவர் இயக்குனர் பிரியதர்சனிடம் சில இந்தி படங்களிலும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்பொழுது வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மாவீரன் படத்தின் கதையை சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு உருவாக்கி அப்பார்ட்மெண்ட் என அந்த கதைக்கு பெயரிட்டு இருந்திருக்கிறார் பினு சுப்பிரமணியன்.
இந்த கதையை அவர் உருவாக்குவதற்கு முக்கிய காரணமே அவர் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் தான், அவர் வாழ்க்கையில் ஒரு அப்பார்ட்மெண்டில் வீடு வாங்குவதற்காக அரசியல்வாதி ஒருவரிடம் பணம் கொடுத்து பின்பு அந்த வீடு கிடைக்காமல், ஒரு வழியாக நடையா நடந்து ஒரு கட்டத்தில் கொடுத்த பணத்தை திருப்பி வாங்கியுள்ளார் பினு சுப்பிரமணியன்.
அதேபோன்று சில வருடங்களுக்கு முன்பு சென்னை புளியந்தோப்பில் கட்டப்பட்ட அடுக்கு மாடி கட்டிடம் தரம் இல்லாமல் கட்டப்பட்ட விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பில் அடுக்குமாடி கட்டிடம் தரம் இல்லாமல் கட்டப்பட்ட சம்பவத்தையும் தான் ஒரு அரசியல்வாதியிடம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவதற்கு பணம் கொடுத்து பின்பு ஏமாற்றப்பட்டு நடையாய் நடந்து அந்த பணத்தை திருப்பி வாங்கிய, இந்த இரண்டு சம்பவங்களையும் ஒன்றிணைத்து அப்பார்ட்மெண்ட் என்கின்ற பெயரில் ஒரு கதையை உருவாக்கி இருந்திருக்கிறார் பினு சுப்பிரமணியன்.
இந்த நிலையில் இந்த படத்தை யோகி பாபுவை வைத்து எடுக்கலாம் என்கின்ற முயற்சியில் இறங்கிய பினு சுப்ரமணியன், அப்போது யோகி பாபு மண்டேலா என்கின்ற படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அந்தப் படத்தின் கேமரா மேனை தொடர்பு கொண்டு தான் தயார் செய்துள்ள முழு கதையையும் தெரிவித்து அவர் மூலம் யோகி பாபுவை சந்தித்து அப்பார்ட்மெண்ட் என்கின்ற கதையை யோகி பாவிடம் தெரிவித்திருக்கிறார் பினு சுப்பிரமணியன்.
அதேபோன்று வட இந்தியாவில் பிரபல சினிமா பைனான்சியரிடம் பினு சுப்பிரமணியன் இந்த கதையை தெரிவித்திருக்கிறார். இந்த கதை அவர்களுக்கு பிடித்து போக, அந்த சினிமா பைனான்ஸ் நிறுவனம் சத்யஜோதி நிறுவனத்திடம் பினு சுப்ரமணியனை அழைத்துச் சென்று உங்கள் மேற்பார்வையில் இந்த படத்தை பண்ணலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து சத்தியஜோதி பிலிம்ஸ் ஆர் ஜே பாலாஜி அல்லது நடிகர் சூரியை வைத்து இந்த படத்தை எடுக்கலாம் என்கின்ற ஒரு முயற்சியிலும் இறங்கி உள்ளார்கள்.
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இந்த கதையை அந்த இயக்குனருக்கு தெரியாமல் பட்டி டிகிரி செய்து மாவீரன் படம் ஒரு பக்கம் உருவாகிக் கொண்டு இருந்திருக்கிறது. பினு சுப்பிரமணியன் சொன்ன கதையில் யோகி பாபு எலக்ட்ரிஷன் ஆக வருவார். ஆனால் மாவீரன் படத்தில் யோகி பாபு பேட்ச் ஒர்க் செய்கின்றவராக வருகிறார். இந்த நிலையில் யோகி பாபு மூலமாகத்தான் இந்த கதை திருடப்பட்டிருக்கும் என்கின்றனர் சினிமா துறையினர்.
இதனால் மாவீரன் படத்தை பார்த்த பினு சுப்பிரமணியன், அந்த படத்தில் கிளைமாக்ஸ் கட்சியில் அப்பார்ட்மெண்ட் இடிந்து விழுவது விழுவது போன்று, நம் கதை திருடப்பட்டு விட்டது என உடைந்து போய் விட்டாராம். இந்த நிலையில் இந்த கதையை ஏற்கனவே பினு சுப்ரமணியன் எழுத்தாளர் சங்கத்திலும் பதிவு செய்துள்ளார்.
இருந்தாலும் இந்த படம் வெளியாவதற்கு முன்பே இது தன்னுடைய கதை என நீதிமன்றம் சென்று இருந்தால் பினு சுப்பிரமணியனுக்கு நீதி கிடைத்திருக்கும், ஆனால் படம் வெளியாகி விட்டதால் இனி ஒன்றும் செய்ய முடியாது, இருந்தாலும் இனிமேல் அந்த படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் போன்ற உரிமைகளில் தன்னுடைய கதைக்கான நிதியை தர வேண்டும் என பினு சுப்பிரமணியன் நீதிமன்றம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.