கர்நாடக ஆசிரமத்தில் வைத்து ரஜினியை லாக் செய்த பிரபல தயாரிப்பு நிறுவனம்…

0
Follow on Google News

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை முடித்து பெங்களூர் சென்றுள்ள ரஜினிகாந்த் அங்கே ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தில் தங்கி யோக செய்து மன அமைதியை ஏற்படுத்தி வருகிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் இந்த படத்தை பல தயாரிப்பு நிறுவனங்கள் கைப்பற்றுவதற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கையில், தற்பொழுது ஜெயிலர் படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்தை சந்தித்து லோகேஷ் கனகராஜ் – ரஜினி இணையும் ப்ராஜெக்ட்டை கையில் எடுக்க முயற்சி அவரை வலை வீசி தேடி வந்துள்ளது. அப்போது ரஜினிகாந்த் பெங்களூரில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தில் மன அமைதிக்காக யோகா செய்து வருவதாக தகவல் வந்துள்ளது.

இந்த நிலையில் பெங்களூரில் இருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் இணையும் அந்த ப்ராஜெக்ட் எப்படியாவது கையில் எடுத்த வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் மிக தீவிரமாக களம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதே போன்று வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் சமீபத்தில் ரஜினிகாந்த் பெங்களூர் செல்வதற்கு முன்பு ரஜினியை சந்தித்து லோகேஷ் – ரஜினி ப்ரொஜக்ட்டை எடுக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதே போன்று தயாரிப்பாளர் லலித் மற்றும் கேஜிஎப் படத்தை தயாரித்த கொம்பாலயா நிறுவனம் என பலரும் லோகேஷ் ரஜினி ப்ரோஜெட்டை எடுக்க கடுமையாக போராடி கொண்டிருக்கையில், தற்பொழுது ஜெயிலர் படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்க்கு தான் இந்த ப்ராஜெக்ட் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது, ஆனால் பெங்களூரில் ரஜினிகாந்த் தங்கி இருக்கும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அசிரமத்தில் வைத்து லாக் செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கொம்பாலயா நிறுவனத்தினர் பெங்களூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளனர், முதலில் ஆசிரமத்திற்கு கொம்பாலயா நிறுவனத்திற்கு வந்துள்ளனர், அடுத்த சில மணி நேரத்தில் சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்கராவும் வந்துள்ளார். இந்த சந்திப்பின் போது லோகேஷ் – ரஜினிகாந்த் நடிக்கும் ப்ரொஜெக்ட்டை கொம்பாலயா நிறுவனம் எடுப்பது குறித்து ரஜினியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் கொம்பாலயா நிறுவனத்திடம் மிக நெருக்கமாக இருக்கும் சுதா கொங்கரா அவர்கள் மூலம் ரஜினியை எதார்த்தமாக சந்தித்து பேசுவதற்காக தான் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரில் இருந்து ரஜினி வந்ததும் ரஜினி -லோகேஷ் ப்ரொஜெக்டை எடுத்து விடலாம் என சன் பிக்சர் காத்துக்கொண்டிருக்க, பெங்களூரிலே வைத்து ரஜினியை லாக் செய்து ரஜினி – லோகேஷ் ப்ரொஜெக்ட்டை எடுக்க கொம்பாலயா நிறுவனம் ரஜினியிடம் நடத்திய பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.