சென்னை : விஜய் டிவியில் தொகுப்பாளராக மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ஆர்.ஜேக்கள் வெள்ளித்திரையில் மின்னி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் முதல் ராமர் வரை விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள்தான். அப்படி விஜய் டிவியில் இருந்து வந்தவர் தான் ப்ரியா பவானி சங்கர்.
இவர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர் வைபவுக்கு ஜோடியாக மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். வெகு சில படங்களே அவர் நடித்துள்ள நிலையில் தற்போது நான்கைந்து படங்கள் மட்டுமே அவர் கைவசம் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ப்ரியா பவானி சங்கர் ராஜவேலு என்பவரை பலவருடங்களாக காதலித்து வருகிறார்.
ராஜவேலுவுக்கும் பவானி சங்கருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. ப்ரியாவின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சென்னை ஈசிஆர் ரோட்டில் 20 கோடி மதிப்புள்ள பங்களாவை ப்ரியா பவானி ஷங்கர் வாங்கியுள்ளார். மேலும் ஒரு சொகுசு காரையும் வாங்கியுள்ளார்.
கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகள் மட்டுமே ஈசிஆரில் பங்களா வாங்க முடியும். ஆனால் ஒரு படத்திற்கு 20 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கும் ப்ரியா பவானி சங்கர் ஈசிஆரில் பங்களா வாங்கியிருப்பது திரைத்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அருண்விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ப்ரியா நடித்து வருகிறார்.
இன்னும் முழுதாக ஹீரோயின் ஆகாத நிலையில் இவர் எப்படி கோடிக்கணக்கில் செலவளித்து பங்களா வாங்கியிருக்கிறார் என்றும் நம்மால் வாங்கமுடியாத போது சில லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கும் அவர் எப்படி வாங்கினார், வேறு எதும் தொழில் செய்கிறாரா பிரியா பவானி சங்கர் என்றும் சில நடிகைகள் புலம்பிவருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.