தியேட்டரில் ஈ காக்கா கூட இல்லை… என்னடா இது புரட்சி இயக்குனர் பா.ரஞ்சித்க்கு வந்த சோதனை…

0
Follow on Google News

பா.ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம் நடிப்பில், தங்கலான் திரைப்படமானது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீசானது. ஆனால், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படமானது, முதல் நாளில் இருந்தே பல நெகட்டிவ் விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படத்தை உருவாக்கி இருந்தாலும், இதுதான் பா.ரஞ்சத்தின் கெரியரிலேயே மிக மோசமான படம் எனவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தங்கலான் திரைப்படம், முதல் நாளில் வெறும் இவ்வளவு கோடி தான் வசூல் செய்துள்ளதா என்ற First day கலெக்ஷன் எவ்வளவு என வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிகர் விக்ரம் வித்யாசமான கெட்டப்பில், கஷ்டப்பட்டு, வெயில், மழை என்றெல்லாம் பாராமல், ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கலான் படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் விக்ரமின் இந்த கனவை, பா.ரஞ்சித் கலைத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் படத்தில் வரலாற்றை மட்டும் காட்டாமல், தேவையில்லாத இடங்களில் கட்டாயப்படுத்தி சாதி சாயம் பூசி இருக்கிறார். இதனால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் Boy cut தங்கலான் என கூறி, படம் பார்ப்பதையே புறக்கணித்து விட்டனர். இதனால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் முதல் நாளிலேயே சரசரவென குறைந்து விட்டது.

தங்கலான் திரைப்படம், கி.பி. 1890 காலகட்டங்களில், கோலார் தங்கவயலில் இருந்து தங்கம் எடுக்க ஆங்கிலேயர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களை பயன்படுத்தினர் என்பதும், அவர்களுக்கு ஏற்பட்ட தடங்கல், அதிலிருந்து எவ்வாறு மீண்டு தங்கத்தை எடுக்கின்றனர் என்பதுதான் கதை. மேலும் படத்தில் வரும் அசோகன் கதாபாத்திரம், புத்தர் சிலையில் தலைப் பகுதியை முதலில் எடுப்பதும்,

அதனை வெட்டி எடுக்கப்பட்ட சிலையில் மீண்டும் இணைப்பதும், புத்தர் சிலைக்கு அருகிலேயே எப்போதும் இருப்பதும், மேலும் தங்கம் எடுக்க வந்தவர்களுக்கு எதிராக பேசிக்கொண்டே இருப்பது என இருந்த காட்சிகள் அனைத்தும் வரலாற்றினை சொல்லும் விதமாக இருந்தாலும், சாதாரண ஆடியன்ஸ்களை இந்த படத்தின் கதை கவரவில்லை. ஏனெனில் பல பேருக்கு இந்த படத்தின் கதை புரியவில்லை, அவர்கள் பேசும் மொழியும் புரியவில்லை.

மேலும் நிகழ்காலத்து விக்ரமை, அவரது பூட்டன் காலத்துடன் இணைக்க பயன்படுத்திய மாயம் எல்லாம் ரசிகர்களை கவரும் படி இருந்தாலும், ஆங்காங்கே சாதி சாயம் பூசப்பட்டிருப்பது பலரிடையே முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான், தற்போதய காலத்தில் மக்கள், பழைய சாதி கொடுமைகளிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கையில், பா.ரஞ்சித் மீண்டும் பழைய சாதியை வைத்து படம் எடுக்கிறேன் என, சாதியை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று தான், பலரும் இப்படத்தினை பார்க்காமல் தவிர்த்து விட்டனர்.

இந்நிலையில்தான் முதல் நாளிலேயே பல தியேட்டர்கள் காத்து வாங்கியுள்ளது. இதனால், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே, பல தியேட்டர்களில் டிக்கெட்டை புக் செய்து, இலவசமாக ரசிகர்களை படம் பார்க்க வைத்திருக்கிறது. ஏனெனில் முதல் நாளிலேயே தங்கலான் வசூல் குறைந்து விட்டது என சொல்லக்கூடாது என்று, ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே டிக்கெட்டுகளை வாங்கி, அதிக வசூல் செய்தது போல் பில்டப் காட்டி இருக்கிறது.

அப்படி இருந்தும் தங்கலான் படம் முதல் நாளில் உலக அளவில் வெறும் 26.44 கோடி தான் வசூல் செய்துள்ளது. இந்திய அளவில் கிட்டத்தட்ட ரூபாய் 13 கோடிகள் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இதில் தமிழ்நாட்டில் ரூபாய் 11 கோடிக்கும், மேலும், கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சேர்த்து கிட்டத்தட்ட ரூபாய் இரண்டு கோடிகளும் என முதல் நாளில் மட்டும் ரூபாய் 13 கோடிகளை இந்திய அளவில் தங்கலான் வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் மொத்த வசூலே 100 கோடி தாண்டுவதே கடினம் தான் என்றும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.