2017ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்பு பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கேலி, கிண்டல் செய்யும் போக்கு தமிழகத்தில் எல்லை மீறி சென்றது. இது தொலைக்காட்சி வாயிலாகவும் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் வரம்பு மீறி சென்ற நிலையில், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மீண்டும் பிரதமர் மோடி வெற்றி பெற்று பிரதமரான பின்பு தமிழக மக்கள் மத்தியில் மோடி எதிர்ப்பு பிரச்சாரம் வலுவிழந்து போனது.
இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் மோடியை இழிவு படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தது. இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில். இந்த விவகாரத்தை கையில் எடுத்த தமிழக பாஜக இதை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் கவனத்துக்கு கொண்டு சென்றது, இதனை தொடர்ந்து மத்திய அமைச்சகம் சட்ட நடவடிக்கையில் இறங்கியது.
இதனை தொடர்ந்து வழக்கம் போல் இந்த விவகாரம் தொடர்ந்து இரண்டு நாட்கள் பரபரப்பாக பேசப்படும், அதன் பின்பு யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள் என எதிர்பார்த்திருந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், குழந்தைகளை தங்களுடைய வெறுப்பு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஜீ சேனலின் நிர்வாகத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் தர வேண்டும் அல்லது நடவடிக்கைக்கு உட்பட வேண்டும் எச்சரிக்கும் வகையில் அந்த நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டப்படி இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் சந்திக்கவில்லை என்றால், அந்த சேனலை முடக்குவதற்கு கூட வாய்ப்புகள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வரும் வகையில்.
தனிப்பட்ட தங்களின் அரசியல் வெறுப்புகளை வெளிப்படுத்துவதற்காக, அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் மற்றும் கதை எழுத்தாளர் ஆகியோரின் செயல் ஜீ தமிழ் நிர்வாகத்தையே சிக்கலில் சிக்க வைத்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழில் ஒளிபரப்பாகவும் மற்ற முன்னணி தொலைக்காட்சிகள், அந்த தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது, அதில் இனிமேல் யாரும் அரசியல் குறித்த விமர்சங்களை புகுத்த கூடாது, இது நிறுவனத்துக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தும், ஆகையால் இதை தவிர்க்குமாறு கேட்டு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாஜகவை வரம்பு மீறி விமர்சனம் செய்யலாம், யார் கேட்க போகிறார்கள் என ஆட்டம் போட்டு வந்த தமிழக தொலைக்காட்சிகள் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் இருந்து ஜீ தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய பின்பு பீதியில் என்ன செய்வது என தெரியாமல் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் மிக கவனத்துடன் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.