உடல்நிலை காரணமாக அண்ணாத்த படத்தில் இருந்து ரஜினி விலகலா.? வாங்கிய சம்பளத்தை திரும்ப கொடுக்க முடிவா.?

0

நடிகர் ரஜினிகாந்த், நடிகைகள் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா மற்றும் பலர் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார், சன் டிவி கலாநிதிமாறன் தயாரிக்கின்றார், கொரோனா தொற்றுக்கு முன்பு தொடங்கப்பட்ட அண்ணாத்த திரைப்படம் ஹைதராபாதில் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் கொரோனா தொற்று காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது, பின் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது காலம் தாமதம் ஆனது.

இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது, இந்த படப்பிடிப்பு தொடங்கும் முன்பு, இதில் பங்கேற்கும் அனைவரும் தனிமை படுத்தப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனைக்கு பின்பு அனைவரும் படப்பிடிப்பில் பணியாற்ற அனுமதிக்கபட்டனர், இருந்தும் படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்களில் படப்பிடிப்பில் பங்கேற்ற ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, நடிகர் ரஜினிகாந்த் தனிமைப்படுத்தப்பட்டார்.

இதனை தொடர்ந்து கொரோனா பரிசோனை செய்து கொண்ட ரஜினிக்கு கொரோனா தோற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது, ஆனால் அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார், சுமார் மூன்று நாட்கள் சிகிச்சைக்கு பின் சென்னை திருப்பிய ரஜினிகாந்த் தனது உடல்நிலையை காரணம் காட்டி புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவிப்பு வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து புதிய அரசியல் கட்சிக்கு முற்று புள்ளி வைத்தது போன்று, நடிகர் ரஜினிகாந்த், அண்ணாத்த படத்தை தொடரப் போவதில்லை என்றும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனிடம் வாங்கிய சம்பளத்தை திரும்ப கொடுத்து விட்டு,சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியானது, ஆனால் இதுகுறித்து விசாரித்ததில் அரசியலுக்கு மட்டும் தான் முற்று புள்ளி வைத்துள்ளதாகவும், கலாநிதி மாறனிடம் நீங்கள் பயப்பட வேண்டாம் நிச்சயம் உங்கள் படத்தில் நன் நடித்து கொடுத்து விடுகிறேன் என உறுதி அளித்துள்ளாராம் ரஜினிகாந்த்.

இந்நிலையில் அரசியலுக்கு வந்தால் மட்டும் தான் உடல்நிலை பாதிக்குமா.? சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தால் உடல்நிலை பாதிக்காத என ரஜினிகாந்த் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது, மேலும் அரசியலுக்கு முற்று புள்ளி வைத்து அவர் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த மக்களையும் அவருடைய ரசிகர்களையும் ஏமாற்றியது போன்று சினிமாவில் நடிப்பதற்கு ஓய்வு கொடுத்தால் அவருக்கு பல கோடி வருமானம் பாதிக்கப்படும் என்பதால் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்த பின்பும் தொடர்ந்து சினிமாவில் அவர் நடிப்பார் என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசியலுக்கு வந்தால் மட்டும் தான் உடல்நிலை பாதிக்குமா.? சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தால் உடல்நிலை பாதிக்காத என ரஜினிகாந்த் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது, மேலும் அரசியலுக்கு முற்று புள்ளி வைத்து அவர் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த மக்களையும் அவருடைய ரசிகர்களையும் ஏமாற்றியது போன்று சினிமாவில் நடிப்பதற்கு ஓய்வு கொடுத்தால் அவருக்கு பல கோடி வருமானம் பாதிக்கப்படும் என்பதால் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்த பின்பும் தொடர்ந்து சினிமாவில் அவர் நடிப்பார் என்றே கூறப்படுகிறது. மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .

என்னை மன்னிசிடுங்க ! விஜயகாந்தை நேரில் சந்தித்து கதறி அழுத வடிவேலு.! பிரேமலதா என்ன சொன்னார் தெரியுமா.?