இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டு கடந்த மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வந்த படம் பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் பேன் இந்தியா படம் என்கின்ற ஒரு அந்தஸ்துடன் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டிருந்தாலும், தமிழ் தவிர பிற மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்திற்கு வரவேற்பு இல்லை.
அதே நேரத்தில் பொன்னியின் செல்வன் வெளியான முதல் நாள் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படம் படு மொக்கையாக இருந்ததால், மேலும் அடுத்தடுத்து தீபாவளி வரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு தமிழ் படமும் வெளியாகாத நிலையில், பொன்னியின் செல்வன் தமிழ்நாட்டில் வசூலில் சக்க போடு போட்டு வந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் வெளியான செப்டம்பர் 30ஆம் தேதி கே ஜி எஃப் திரைப்படத்தை தயாரித்த அம்பாலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கந்தாரா படம் கன்னட மொழியில் வெளியானது.
கன்னட படமான காந்தாரா அடுத்த இரண்டு வாரத்தில் பிற மொழிகளிலும் பேன் இந்தியா படமாக வெளியானது. பொன்னியின் செல்வன் படம் வெளியாகி இரண்டு வாரங்களில் பிறமொழிகளில் வெளியான காந்தாரா படம், அனைத்து மொழிகளிலும் வசூல் சாதனை படைத்து பொன்னியின் செல்வன் படத்தை மண்ணை கவ்வ வைத்துள்ளது.
இந்த நிலையில் பேன் இந்தியா படம் என வெளியாகி தமிழில் மட்டும் வசூல் சாதனை படைத்துள்ள பொன்னியின் செல்வனை வசூலில் மண்ணை கவ்வ வைத்துள்ள காந்தாரா படத்தின் நடிகரை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியது, தமிழிலும் இந்த படத்திற்கு மேலும் பிரமோசனை தேடித் தந்துள்ளது. இதனால் ரஜினிகாந்த் மீது கடும் வேதனையில் மணிரத்தினம் இருந்து வருவதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.