தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த வருமான வரித்துறை ரெய்டில் தற்பொழுது நடந்து வரும் ரைட் தான் உச்சகட்டம் என்று கூறப்படுகிறது. சினிமா துறையினரை குறிவைத்து தொடர்ந்து நான்கு நாட்களாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர. ஒவ்வொரு படம் திரையரங்கு வெளியான பின்பு அதன் வெற்றி விழாவில் 500 கோடி வசூல் 600 கோடி வசூல் என்று விளம்பரம் செய்ததின் விளைவு தான் இந்த மெகா ரெய்டுக்கு காரணம் .
மேலும் திரையரங்குகளில் வழங்கப்படும் டிக்கெட் தொகையை பெரும்பாலான திரையரங்குகள் சரியான முறையில் வருமான வரித்துறையினரிடம் கணக்கு காட்டுவதில்லை என்கிற குற்றச்சாட்டும் உண்டு. இந்நிலையில் பட தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா பைனான்சியர் இருவருக்கும் இடையில் ஒரு புரோக்கர் இருப்பார்கள். தற்பொழுது இந்த புரோக்கர்களை குறி வைத்து தூக்கி வருகிறது வருமான வரித்துறை.
செங்கல்பட்டுவை சேர்ந்த ஒரு புரோக்கரின் வீட்டில் நடந்த சோதனையில், சினிமா பைனான்சியர் கொடுத்து வைத்திருந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இப்படி புரோக்கர் வரை சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், தற்பொழுது அதிக படங்களை வெளியிடும் உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மீது ஏன் சோதனை நடத்தவில்லை என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு வருடத்தில் வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த படம் கமல்ஹாசன் தயாரிப்பில் அவருடைய நடிப்பில் வெளியான படம் விக்ரம். இந்த படத்தை வாங்கி வெளியிட்டது ரெட் ஜெயன்ட் நிறுவனம். மேலும் விக்ரம் படத்தை பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியனிடம் கடன் வாங்கி தயாரித்துள்ளார் கமல்ஹாசன்.
ஆனால் அன்புசெழியனுடன் எந்த ஒரு டீலிங்கும் ரெட் ஜெயண்ட் நிறுவன உரிமையாளர் உதயநிதி வைத்து கொள்ளவில்லை. படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் உடன் மட்டுமே நேரடி தொடர்பில் விக்ரம் படத்தை வாங்கி வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் படத்தில் வசூலான தொகையில் தயாரிப்பாளர் கமல்ஹாசன் பங்கு முழுவதையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு தனக்கு வர வேண்டிய பணத்தை மட்டும் எடுத்து கொண்டு விலகி கொண்டுள்ளது ரெட் ஜெயண்ட்.
மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களை தீவிரமாக கண்காணிக்கிறார்கள் என்பதை அறிந்து, ரெட் ஜெயண்ட் நிறுவனம் அவர்கள் வெளியிடும் அணைத்து படங்களிலும் விக்ரம் படத்தில் பின்பற்றிய நடைமுறையை செய்து வருவதால் வருமான வரித்துறை வலையில் இருந்து தப்பித்துள்ளனர். அதே நேரத்தில் கமல்ஹாசன் சொந்தமான ராஜ்கமல் பிலிம்ஸ் பாட்னர் மகேந்திரன் வருமான வரி துறை சோதனையில் சிக்கியுள்ளார்.
தற்பொழுது கமல்ஹாசன் நடிப்பதை குறைத்துவிட்டு, சினிமா பைனான்சியர் அன்பு செழியனுடன் நெருக்கிய டீலிங்கை ஏற்படுத்தி அவரிடம் கடன் பெற்று படம் தயாரிப்பதில் இறங்கியுள்ளார். ஆனால் அன்பு செழியனிடம் எப்படி கடனை வாங்குகிறார், மீண்டும் எப்படி திரும்ப கொடுக்கிறார் என்கிற முறையான கணக்கு இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மகேந்திரனை குறி வைத்து வருமான வரித்துறை தூக்கியது கமல்ஹாசனை சிக்க வைக்க தான் என்கிறது சினிமா வட்டாரங்கள்.