நேர்மையை நிரூபித்த ரஜினி.. திருந்துவார்களா விஜய், சூர்யா, கமல்… என்ன நிருபித்தார் ரஜினி தெரியுமா.?

0
Follow on Google News

சினிமா துறையில் இருக்கும் பெரும்பாலான நடிகர் சினிமாவில் பஞ்சு வசனம் பேசி தங்களை நல்லவர்களாக திரையில் காட்டிக் கொள்வார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அரசாங்கத்தையே ஏமாற்றி வருகிற சம்பவங்களும் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. கோடி கோடியாக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் அரசாங்கத்திற்கு சரியான கணக்குகள் காட்டி வருமான வரி கட்டுவது கிடையாது.

அந்த வகையில், நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த வருமான வரி சோதனையில் 2007, 2008, 2009 நிதியாண்டிற்கான வருமான வரியை செலுத்த வேண்டுமென வருமான வரித்துறை தெரிவித்தது, மேலும் இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் செலுத்த வேண்டும் என தெரிவித்தது சூர்யாவின் நேர்மையின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்தது.

அதேபோன்று வருமான வரித்துறையில் நடிகர் விஜய் சிக்குவது புதிது அல்ல. மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் நெய்வேலியில் இருக்க, சென்னையில் அதிரடியாக விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இதனைத் தொடர்ந்து நெய்வேலியில் இருந்து நடிகர் விஜயை தட்டி தூக்கி சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியனர் வருமான துறையினர்.

மேலும் பிரிட்டனில் இருந்து விலை உயர்ந்த ரோல்ஸ் ராயல்ஸ் கார் இறக்குமதி செய்வதற்காக நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலகு கேட்ட நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபதாரம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமூகநீதிக்கு பாடுபடுவதாக சொல்லிக் கொள்ளும் நடிகர்கள் வரியை செலுத்தாமல் இருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என எச்சரித்த நீதிபதி.

நடிகர்களில் “ரீல் ஹீரோக்களாக” இல்லாமல் “ரியல் ஹீரோக்களாக” இருக்க வேண்டும், வரி ஏய்ப்பு என்பது தேச துரோகத்துக்கு சமம் என நடிகர் விஜய்க்கு அறிவுறுத்தி இருந்தார் நீதிபதி. இது நடிகர் விஜய்க்கு மிக பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியது, அதே போன்று இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக வசூல் பெற்ற படம் விக்ரம். ஆனால் இந்த படத்தின் எவ்வளவு வசூல் பெற்றது என வெளிப்படையாக கமல் அறிவித்து முறையாக வருமான வரி செலுத்துவாரா என்கிற சந்தேகம் மக்களுக்கு உண்டு.

இந்நிலையில் ஒரு பக்கம் சினிமா நடிகர்கள் வரி காட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு அதிக அளவு வருமான வரி செலுத்தியதற்காக விருது வழக்கப்பட்டுள்ளது. ஒருவர் செலுத்தும் வருமான வரி என்பது நாட்டின் மக்களுக்கு அரசாங்கம் செலவிடும் நலத்திட்டத்திற்கான பணம். அந்த வகையில் நாட்டின் வளர்ச்சிக்காக வரி ஏய்ப்பு செய்யும் சினிமா துறையினர் முறையாக வருமான வரி செலுத்தி ரஜினிகாந்தை பின் பற்றி வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

ஓவர் டார்ச்சர்… விஜய் முகத்தில் அடித்தது போல் பேசிய மேனஜர்…உங்க வேலையே வேண்டாம்..ஏன் தெரியுமா.?