பிரபல சினிமா பைனான்சியர் மதுரையைச் சேர்ந்த அன்பு செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் கதி கலங்கி போய் உள்ளன. அன்புச செழியன் வீட்டில் இருந்து வருமான வரித்துறையினர் கைப்பற்றிய டைரி குறிப்பில், சினிமா துறையைச் சேர்ந்த பலரின் பெயர் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
அன்புச்செழியனிடம் தொழில் ரீதியாக, கொடுக்கல் வாங்கல் செய்து வந்த சினிமா துறையைச் சேர்ந்த பலர் அடுத்தடுத்து வருமான வரித்துறை விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு வொண்டர்பார் ஃபிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் தனுஷ், ஆரம்பத்தில் அவர் தயாரித்த ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது.
அதன் பின்பு அடுத்தடுத்து தனுஷ் தயாரிப்பில் வெளியான படங்கள் படுதோல்வியை சந்தித்து மிகப்பெரிய நஷ்டத்தை அவருக்கு ஏற்படுத்தியது. இதன் பின்பு கடன் வாங்கி படம் தயாரிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட தனுஷ், சினிமா பைனான்சியர் அன்புசெழியனிடம் கடன் வாங்கி படம் தயாரித்து வந்தார். ஒரு கட்டத்தில் கடும் கடன் சுமையில் தத்தளித்து வந்த தனுஷ்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மாமனார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படத்தை தயாரித்து, அதில் வந்த லாபத்தில் அன்புச் செழியன் கடனை அடைத்துள்ளார். வாங்கிய மொத்த கடனையும் அடைத்த பின்பு, மீண்டும் நீங்கள் படம் தயாரிக்க பணம் தேவை பட்டால், எப்ப வேண்டுமானாலும் என்னை நீங்கள் அழைக்கலாம் என்று தனுஷிடம் தெரிவித்துள்ளார் அன்புசெழியன்.
ஆனால் வாங்கிய கடனை அடைத்த பின்பு சொந்தமாக படம் தயாரிப்பதை கைவிட்டுவிட்டார், இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு அன்பு செழியனிடம் நடந்த வருமான வரித்துறை சோதனையில் தனுஷிடம் கொடுக்கல் வாங்கல் வைத்துள்ளதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். இருந்தும் அவர் 2018க்கு பிறகு எந்த ஒரு படமும் தனுஷ் தயாரிக்காத நிலையில் வருமான வரித்துறையில் வலையில் சிக்காமல் தப்பித்து கொண்டார் தனுஷ்.
ஆனால் 2020 வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ஆவணங்களை வைத்து, தற்பொழுது அன்புசெழியன் தொடர்பில் இருக்கும் சினிமா துறையை சேர்ந்தவர்களிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக ரஜினிகாந்த் குடும்பத்திடம் மிக நெருக்கம் காட்டி வந்தார் அன்பு செழியன்.இதன் காரணமாக அன்புசெழியன் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டார் ரஜினிகாந்த்.
இந்த நெருக்கத்தின் பின்னணியில் அன்புச் செழியன் உடன் தொழில் ரீதியாக ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் தன்னுடைய பணத்தை அன்புச்செலியனிடம் முதலீடு செய்துள்ளதாகவும்.தற்பொழுது அன்புசெழியனிடன் நடந்த வருமான வரித்துறை சோதனையில், ரஜினிகாந்த் பனம் மற்றும் அன்புசெழியனிடம் கொடுக்கல் வாங்கல் செய்ததற்கான சில முக்கிய குறிப்புகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதனால் தான் ரஜினிகாந்த், தன்னையும் தன்னுடைய பணத்தையும் காப்பாற்றி கொள்ள அவசரமாக டெல்லி சென்று, அங்கே முக்கிய புள்ளிகளை சந்தித்து பேசியவர், அதன் பின்பு தமிழக ஆளுநரை சந்தித்து பேசியதாக சினிமா வட்டாரத்தில் பரபரபப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.