தமிழ் சினிமா துறையினர் மீது நடந்து வரும் வருமான வரித்துறை சோதனையில், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் சீர்குலைந்து சின்னாபின்னமாகி உள்ளது. குறிப்பாக சினிமாவை காக்கும் கடவுள் என்று அழைக்கப்படும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், பல கோடி ரூபாய் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பெரும்பாலான கருப்பு பணம் திரையரங்கு வாயிலாக தான் வருகிறது என்பதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அவரது சொந்த தயாரிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் அதிக வசூல் சாதனை படைத்தது. இருந்தும் தனக்கு வந்த பணத்தை வெய்ட் பணமாக மட்டுமே கமல்ஹாசன் பெற்று கொண்டதால் வருமான வரித்துறையில் கமல்ஹாசன் சிக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் நடிகர், விஜய் சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்கள் சொந்தமான இடங்களில் இதற்கு முன்பு வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி இருந்த நிலையில், நடிகர் அஜிதிடம் மட்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் நெருக்கவில்லை. அனல் நடிகர் அஜித் கைவசமும் கருப்பு பணம் இருந்து, அதனால் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
ஒரு காலத்தில் அஜித் சம்பளம் கருப்பு மற்றும் வெள்ளை என கலந்து சம்பளம் வாங்கி வந்துள்ளார். வெள்ளையாக வாங்கு பணத்தை சேமித்து கொண்ட அஜித்குமார், கருப்பு பணத்தை செலவு செய்வது, மேலும் ஏழை மக்களுக்கு மருத்துவ செலவு, பள்ளிகளுக்கு கட்டணம் செலுத்துவது, என தன்னிடம் உதவி தேடி வருகின்றவர்கள் பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஒருமுறை நடிகர் அஜித் வீட்டில் நடைபெற்ற வருமான வரி துறை சோதனையில்,இவர் வாங்கிய கருப்பு பணம் குறித்து அதிகாரிகள் கிடக்கு பிடி விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் வீட்டில் கிடந்த குப்பை பேப்பரை கூட எடுத்து, இது என்ன எழுதி இருக்கு,இது என்ன கணக்கு என துருவி துருவி கேள்வி மேல் கேள்வி கேட்டு கடும் டார்ச்சர் செய்துள்ளார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.
இந்த சோதனைக்கு பின்பு நடிகர் அஜித்குமார் கருப்பு பணத்தில் சம்பளம் வாங்குவதை நிறுத்திக் கொண்டுள்ளார், தன்னுடைய மொத்த பணத்தையும் ஒயிட் பணமாக வாங்கி வருகின்றார். மேலும் இந்த வருமான வரித்துறை சோதனைக்கு பின்பு கருப்பு பணமும் வாங்குவது கிடையாது, அதேபோன்று உதவி செய்வதையும் நிறுத்தி விட்டதாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் இந்த வருமான வரி சோதனைக்கு பின்பு அப்போது பேட்டியளித்த அஜித் பேசியதாவது, வீட்டில் வைத்த பொருள்கள் பாதி எங்கே வைத்தோம் என்பது தெரியாமல் இருந்தது. வருமான வரி சோதனையில் காணாமல் போன பொருள்கள் அத்தனையும் மீண்டும் கிடைத்துவிட்டது. இதனால் மகிழ்ச்சி அடைகிறேன் தவிர எனக்கு எந்தவித அதிர்ச்சியும் ஏற்படவில்லை, மேலும் நான் முறை தவறி எதையும் வீட்டில் வைக்கவில்லை என்று மகிழ்ச்சியுடன் பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.