தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்டுகின்றவர் இயக்குனர் சங்கர். தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்துக்கு எடுத்து சென்றவர் இயக்குனர் சங்கர் என்கிற பெருமையும் அவருக்கும் உண்டு, சமூகம் மற்றும் தேச நலன் சார்த்த படங்களை அதிகம் இயக்கி வருகின்றவர் இயங்குனர் சங்கர் என்பதால், தேசம் நலம் சார்ந்த தேசியவாதிகள் மத்தியில் சங்கருக்கு ஒரு இடம் உண்டு. இப்படி மிக பெரிய உச்சத்தில் இருக்கும் இயக்குனர் சங்கரை அசிங்க படுத்தி இளையராஜா அனுப்பிய சம்பவம் ஓன்று வெளியாகியுள்ளது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான முதல் படம் ஜெண்டில்மேன், இந்த படத்துக்கான ஹீரோ அர்ஜுன் மற்ற கதாபாத்திரத்துக்கான நடிகர்களை தேர்வு செய்த பின்பு, இந்த படத்தின் தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமேனன் படத்தின் இயக்குனரை நேரில் அழைத்து, ஜெண்டில்மேன் படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா தான், அவரை சென்று நேரில் பார்த்து, நான் அனுப்பினேன் என தெரிவித்து புதிய படம் குறித்து அவரிடம் கதையை தெரிவித்து விட்டு வா என குஞ்சுமேனன் அனுப்பியுள்ளார்.
இளையராஜா ஸ்டுடியோவுக்கு சென்ற சங்கர் அங்கே கே.டி குஞ்சுமேனன் அனுப்பி விட்டார், புதிய படத்துக்கான கதையை தெரிவித்து வர சொன்னார் என தெரிவிக்க, இளையராஜாவுக்கு சங்கர் முகத்தை பார்த்த உடனே கடும் கோபம் ஏற்பட்டுள்ளது, ஏதும் பேசாமல் இசை பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் இளையராஜா, ஸ்டூடியோ வெளியே இயக்குனர் சங்கர் காத்திருக்கிறார், ஆனால் இளையயராஜாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.
காலை பத்து மணிக்கு சென்ற இயக்குனர் சங்கரை மாலை 3 மணிவரை காக்க வைத்து எந்த ஒரு வார்த்தையும் பேசாமல், தனது இசை பணி முடிந்ததும் ஸ்டுடியோவில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டார் இளையராஜா, அங்கே ஸ்டுடியோவில் இருந்தவர்களிடம் இலையராஜா மீண்டும் வருவாரா.? நான் காத்திருக்க வேண்டுமா.? என சங்கர் கேட்க, அதெல்லாம் இனி வரமாட்டார் நீங்கள் புறப்பட்டு சொல்லுங்க என சங்கரை அங்கே இருந்து அனுப்பியுள்ளார்.
இளையராஜாவை நேரில் சந்திக்க சென்று அங்கே பார்க்க முடியமால் காக்க வைத்து அசிங்கப்படுத்தி அனுப்பி வைத்ததை கே.டி குஞ்சுமேனன் அவர்களிடம் சங்கர் தெரிவிக்க, இதன் பின்பு ஜெண்டில்மேன் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்துள்ளார், படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் சூப்பர்,டூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் ஷங்கரை ஏன் இளையராஜா நேரில் பார்க்க மறுத்துவிட்டார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியன் படத்தின் இயக்குனர் பவித்ரன் உதவியாளராக இருந்தவர் சங்கர், சூரியன் படத்தின் இசை அமைப்பாளராக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் இளையராஜா, சூரியன் படத்தின் பாடல் மெட்டுக்களை இளையராஜா வசித்து காண்பிக்க பவித்ரன் அருகில் இருந்த அவரது உதவி இயக்குனர் சங்கர், மெட்டு சரியில்லை வேறு ஒரு மெட்டை போட சொல்லுங்க என்று கூற அதையே பவித்ரன் முன்மொழிந்துள்ளார்.
இளையராஜா இரண்டாவதாக அடுத்த மெட்டை போட அதுவும் சரியில்லை வேறு ஒரு மெட்டை போட சொல்லி சங்கர் தெரிவித்துள்ளார். மூன்றாவதாக ஒரு மெட்டை இளையராஜா போட அதுவும் சரியில்லை என அப்போது உதவி இயக்குனராக இருந்த சங்கர் தெரிவிக்க, டென்ஷனான இளையராஜா, ஹார்மனி பெட்டியை எடுத்து கொண்டு, நீ இயக்குனரா.?பவித்ரன் இயக்குனரா.? என கோபத்துடன் உங்கள் படத்துக்கு இசை அமைக்க மாட்டேன் என அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதன் பின்பு சூரியன் படத்துக்கு தேவா இசை அமைக்க அந்த படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படி இதற்கும் முன்பு உதவி இயக்குனராக இருந்த சங்கர் -இளையராஜா இடையே நடந்த இந்த மோதல் தான் ஜெண்டில்மேன் படத்துக்காக இசை அமைக்க தன்னை தேடி வந்த சங்கரை அசிங்க படுத்தி இளையராஜா அனுப்ப காரணம் என கூறப்படுகிறது.