எம்.ஜி.ஆரிடம் இருந்து பிரித்து 7 வருடம் ஜெயலலிதா கோயிங் ஸ்டெடி வாழ்கை வாழ்ந்த அந்த நடிகர் என்ன ஆனார் தெரியுமா.?

0
Follow on Google News

எம்.ஜி.ஆர். உடன் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த ஜெயலலிதா ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார், அப்போது ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைக்கு தந்தையாக இருந்த தெலுங்கு நடிங்கர் சோபன் பாபுவுடன் காதல் வயப்பட்டார் ஜெயலலிதா, இவர்களின் காதல் அதி தீவிரமானதை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தனர்.

ஜெயலலிதா – சோபன் பாபு இருவருக்கு கோயிங் ஸ்டெடி வாழ்கை வாழ்ந்து வருவது குறித்து அப்போது பத்திரிகையில் கிசு கிசுக்கள் வந்ததை தொடர்ந்து. இந்த விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சோபன் பாபு உடன் தனியாக குடித்தனம் நடத்துவது பற்றி ஜெயலலிதா எந்த ஒரு ஒளிவு மறைவின்றி பகிரங்கமாக பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி தொடர்ந்து தன்னை பற்றி கிசு கிசு எழுதிய பத்திரிகளுக்கு விளக்கம் கொடுத்தார்.

அடுத்தவர் கணவரான ஷோபன் பாபுவுடன் ஜெயலலிதா திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வருவது குறித்து 1980-ம் ஆண்டு நாளிதழ் ஒன்றுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டியில்,நானும் சோபன் பாபுவும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்”, திருமணம் செய்துகொண்டால்தான் கணவன் – மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்”.

சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பதால்தான் அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில், நான் அவரோடு தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்”, எந்த கன்னிப் பெண்ணும் வேண்டும் என்று திட்டமிட்டு ஏற்கனவே திருமணமான ஒருவரை காதலிப்பது இல்லை. எந்தப் பெண்ணுமே தனக்கென்று ஒருவர் இருக்க வேண்டும். அவர் தனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவாள். நானும் அப்படித்தான் முதலில் கனவு கண்டேன்.

ஆனால் எதிர்பாராத விதமாக ஷோபன் பாபுவைச் சந்தித்தவுடன் என் மனம் அவர் மீதே பற்றுக் கொண்டுவிட்டது. திட்டமிட்டுச் செய்த காரியமல்ல இது. அவரை முதலில் சந்தித்த போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. அது அவருடைய தவறும் அல்ல. என்னுடைய தவறும் அல்ல. அவர் மனைவியை விவகாரத்து செய்து என்னை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? எத்தனையோ பேர் அப்படிச் செய்யவில்லையா? என கேட்கலாம். ஆனால் நாங்கள் இருவரும் அப்படிச் செய்ய விரும்பவில்லை.

அவருடைய மனைவி எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் எதற்காக நிராகரிக்கப்பட வேண்டும்? தவிர அவர் மனைவியின் உடல்நிலையும் சரியில்லை. ஆரோக்கியம் இல்லை. என்னை ஷோபன் பாபு சந்திக்கும் முன்பே அவர் மனைவியின் ஆரோக்கியம் சீர் குலைந்திருந்தது. அப்படி இருக்க, அவருக்கு மேலும் அதிர்ச்சியைத் தருவது நியாயமாகாது என்று எண்ணினோம்’ என்று சோபன் பாபு உடன் திருமணமாகாமல் கனவன் மனைவியாக வாழ்ந்ததை ஒப்பு கொண்டார்,

இதன் பின்பு சோபன் பாபுவிடம் இருந்து பிரிந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த எம்ஜிஆர் அரவணைப்பில் அதிமுகவில் தன்னை இனைத்து கொண்டார், முழு நேர அரசியல்வாதியாக மாறினார் பின் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா, பல சோதனைகளை கடந்து முதல்வராக பதவி யில் இருந்த போது தமிழகத்தில் சோபன் பாபுவுக்கு சிலை அமைத்தது குறிப்பிடதக்கது.