விஜயை வெச்சி செய்ய காரணம்.. அவரின் அரசியல் ஆசை திமுகவுக்கு பிடிக்கவில்லை.!விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதித்த பாஜக முக்கிய தலைவர்..

0
Follow on Google News

இங்கிலாந்தில் இருந்து கடந்த 2012ல் இறக்குமதி செய்த விலை உயர்ந்த சொகுசு ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் நடிகர் விஜய். இதை விசாரித்த நீதிமன்றம் விஜயின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்ததுடன், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும் நீதிமன்றம் தீர்ப்பில், ‛சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது.

சினிமா நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது. வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல, குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு.’ என நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு அறிவுரை வழங்கியது. இந்நிலையில் இந்த விவகாரம் நடிகர் விஜய்க்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துக்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களின் ஒருவரான நடிகை காயத்ரி ரகுராம் இது குறித்து அவர் கூறுகையில். நடிகர் விஜய் பல ஏழை மக்களுக்கு உதவி செய்து தனது நிஜ வாழ்விலும் ஹீரோவாக வலம் வருகிறார். கொரோனா நிவாரண நிதியாக பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண பணிக்கு நண்கொடை அளித்துள்ளார். பல மாணவர்கள் கல்விக்கு உதவி வருகிறார். மேலும் தனது ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார்.

ஊடகங்கள் நடிகர் விஜயின் தன்மையை கெடுக்க கூடாது. அவர் தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காக இருந்தது, அது நிதிமன்றத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. ஆகையால் அவருடைய உதைவியை நாம் மறந்துவிடக் கூடாது. அவருடைய நல்ல செயல்களை யாரும் படுகொலை செய்துவிட முடியாது . காருக்கான நுழைவு வரி விலக்குக்கு மட்டுமே அவர் நீதி மன்றத்தில் கோரியிருந்தார். நீதிமன்றம் அதை வழங்கவில்லை என்றால், அவர் பணம் செலுத்தப் போகிறார் அவ்வளவு தான் என்று தெரிவித்த காயத்ரி ரகுராம்.

மேலும் பிரபல சினிமா விநியோகஸ்தர் ஜெயம் SK கோபி, விஜய்யோட ஒரு லட்சம் அபராதம் மேட்டரை தல ரசிகர்கள் கலாய்க்கிறாங்க அதுல ஒரு லாஜிக் இருக்கு.ஆனா.சம்பந்தமே இல்லாம ஓட்டு மொத்த ஊடகமும் சேந்து விஜயை வச்சி செய்ய காரணம் விஜய்யின் அரசியல் ஆசை, அது திமுகக்கு பிடிக்வில்லை என பதிவு செய்திருந்ததை மேற்கோள்கட்டி, அதில் கடைசி வார்த்தையை ஏற்று கொள்வதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.