சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின், வித்தியாசமான படைப்புகளால் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து தடுமாறாமல், இயக்குனர் பாலா போன்று, இந்த நடிகரின் படம் என்றும் சொல்லும் அளவில் இல்லாமல், இது இந்த இயக்குனரின் படம் என்று பேசும் அளவுக்கு, நடிகருக்காக படம் எடுக்கமால் வித்யாசமான படைப்புகளை கொடுத்து வருகின்றவர் மிஷ்கின்.
இந்த நிலையில் சமீப காலமாக சினிமாவில் கவர்ச்சி என்பது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாக ஒரு நடிகை அவருடைய கவர்ச்சிக்கு ஒரு அளவுகோல் வைத்திருந்தால், அந்த நடிகை சினிமாவில் நிலைத்து நிற்பார். அதே நேரத்தில் தன்னுடைய ஒரு நடிகை தன்னுடைய மொத்த உடம்பையும் சினிமாவில் காட்டி விட்டால், அந்த நடிகை அத்துடன் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவார்.
இது போன்று, நடிகை அமலா பால் நடித்த ஆடை படத்தில், ஆடை இல்லாமல் முழு நிவாரணமாக சில காட்சிகள் நடித்திருந்தார், இதன் பின்பு அமலா பால் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் சென்றுவிட்டார், இதற்கு காரணம் தனது உடம்பை முழுவதும் ரசிகர்களுக்கு காட்டிவிட்டால், இனி பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்று, அந்த நடிகையை ரசிகர்கள் புறக்கணித்து விடுவார்கள் என்கின்றது சினிமா வட்டாரங்கள்.
இந்நிலையில் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படம் படத்தில் நடித்த நடிகையின் நிர்வாண காட்சிகள் அந்த படத்தில் இடம்பெற்றது. இதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. பார்த்திபன் தன்னுடைய திறமையை முழுவதும் இந்த படத்தில் வெளிப்படுத்திருந்தாலும், சில நிமிடங்கள் மட்டும் இடம்பெற்றுள்ள நிர்வாண காட்சிகளால், இரவின் நிழல் படம் நிர்வாண படம் என்கின்ற முத்திரை குத்தப்பட்டு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து.
இந்த நிலையில் மிஸ்கின் இயக்கி வரும் பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியாவை அந்த படத்தில் அரை மணி நேரம் நிர்வாணமாக நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளார் மிஸ்கின். இதற்காக ஆண்ட்ரியாவும் முழு ஒத்துழைப்பை கொடுத்து நிர்வாணமாக நடித்துள்ளார். படம் எடுத்து முடிக்கப்பட்டு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில்.
இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற நிர்வாண காட்சிகளால் அந்தப் படத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாக. ஆண்ட்ரியாவை நிர்வாணமாக வைத்து பிசாசு 2 படத்தில் எடுத்த 30 நிமிட காட்சியை மிஸ்கின் நீக்கிவிட்டார். இதனால் நிர்வாணமாக நடித்த தனது காட்சிகள் பெருமளவில் பேசப்படும் என எதிர்பார்த்த ஆண்ட்ரியா மிகுந்த மன வேதனையில் இருப்பதாக கூறப்டுகிறது. அதே நேரத்தில் ஆண்ட்ரியாவை நிர்வாணமாக நடிக்க வைத்து பின்பு அந்த காட்சியை திடீரென நீக்கி உள்ள மிஷ்கினின் செயல் ஒரு சைக்கோ போன்றது என சினிமா வட்டாரத்தில் விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.