இதெல்லாம் அஜித்தின் வியாபாரம் தந்திரம்.. இது தெரியாமல் சில்லரையை சிதறவிடும் அப்பாவிகள்..

0
Follow on Google News

90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக இருந்தவர்கள் ரஜினி, கமல், விஜயகாந்த் மற்றும் பலர். இதில் ரஜினிகாந்த் தவிர்த்து மற்ற நடிகர்கள் அனைவரும் பெரும்பாலான சினிமா நிகழ்ச்சிகள், பத்திரிக்கையாளர் சந்திப்புகள் என அனைத்திலும் கலந்து கொண்டு அடிக்கடி அவர்கள் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கும்.

ஆனால் ரஜினிகாந்த் முக்கிய ஒரு சில நிகழ்ச்சி தவிர்த்து மற்ற எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பெரும்பாலும் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தவர். மேலும் 90 காலகட்டத்தில் ரஜினிகாந்த் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தபோது அவருடைய ஒவ்வொரு படத்திற்கும் இடையில் ஒரு வருடம் இரண்டு வருடங்கள் கூட இடைவெளி எடுத்துக் கொண்டவர். இதனால் தொடர்ந்து அவருடைய ரசிகர்களை எப்போதும் துடிப்புடனே வைத்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த்.

அடிக்கடி ஒரு நடிகர் பொது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும், பத்திரிக்கையாளரை சந்திப்பதுமாக இருந்து கொண்டிருந்தால், அந்த நடிகர் மீதான எதிர்பார்ப்பு ரசிகருக்கு இருக்காது. அந்த வகையில் ரஜினிகாந்த் தன்னுடைய மாசை எப்போதுமே தக்க வைப்பதற்காக பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்துள்ளார்.

இதுவே ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கும் மிகப்பெரிய மாஸ் விளம்பரத்தை தேடித்தந்தது. என்னை எனது ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்றால் திரையில் வந்து பார்த்துக் கொண்டாடட்டும் என்கின்ற ஒரு நிலையில் ரஜினிகாந்த் இருந்ததால், அவருடைய ஒவ்வொரு படம் வெளியாகும் போது அவருடைய ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

ரஜினிகாந்த் பார்முலாவை பின்பற்றி அஜித் பெரும்பாலும் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. மேலும் பத்திரிக்கையாளரை சந்திப்பதும் கிடையாது. தன்னுடைய ரசிகர்கள் தன்னை காண வேண்டும் என்றால் திரையில் வந்து பார்த்து கொண்டாடட்டும் என்கின்ற ஒரு வியாபார யுக்தியாக ரஜினியை பின்பற்றி வருகிறார் அஜித் என்கிற விமர்சனம் எழுத்து வருகிறது.

அதே நேரத்தில் ரஜினிகாந்த் ஒவ்வொரு படமும் வெளியாகும் முன்பு, ஒரு பரபரப்புக்காக அரசியல் குறித்து ஏதாவது கருத்து தெரிவித்து வருவார், அது அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படத்திற்கு ஒரு விளம்பரத்தை பெற்று தரும். அந்த வகையில் தற்பொழுது அஜித் பைக் ஓட்டுவது, வெளிநாடுகளில் ஷாப்பிங் செய்வது, ரயிலில் பயணம் செய்வது, என அவருடைய புகைப்படங்கள் தொடர்ந்து அஜித் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டு வருகின்றது.

இது அஜித் நடிக்கும் படத்திற்கான ப்ரோமோஷன் தான் என்கின்றது சினிமா வட்டாரங்கள். ஆனால் அஜித்தின் இந்த வியாபார யுக்தியை புரிந்து கொள்ளாமல். அஜித்தின் புகைப்படத்தை பார்த்து பலர் சில்லறையை சிதற விடுவது குறிப்பிடத்தக்கது.

பறிபோகிறது சூர்யாவின் தேசிய விருது… இந்திய அளவில் மிக பெரிய அவமானத்தை சந்திக்கும் சூர்யா..!