லஷ்மி ராமகிருஷ்ணன் யோக்கியதை வெளிச்சம் போட்ட சினிமா பிரபலம் ..! எதுக்குமா இந்த யோக்கிய வேஷம் உனக்கு.?

0
Follow on Google News

நடிகை, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், இவர் சினிமாவில் பல படங்கள் நடித்துள்ளார், திரைப்படங்கள் இயக்கியுள்ளார். ஆனால் இவருக்கு சினிமாவில் கிடைக்காத ஒரு விளம்பரம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் மிக பிரபலமாக அறியப்பட்டார். இதனால் தன்னை ஒரு சமூக ஆர்வலர், ஒரு பெண்ணியவாதியாக அடையாளப்படுத்தி கொண்டு வலம் வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இவர் தொகுத்து வழக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், குடும்பத்தில் நடக்கும் அந்தரங்க பிரச்சனைகளுக்கு இவர் என்னமோ உச்ச நீதிமன்ற நீதிபதி போன்று, அந்த குடும்ப உறுப்பினர்களை அழைத்து அவர்களின் குடும்ப பிரச்சனையை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி சம்பந்தப்பட்ட குடும்ப மானத்தை காற்றில் பறக்கவிடும் செயலில் ஈடுபட்டு வரும் லட்சுமி ராம்கிருஷ்னன் பெரும்பாலும் இவர் கள்ள காதல் விவாகரத்துக்கு தான் பஞ்சாயத்து செய்து வருகிறார்.

அதே வேலையில், இவர் சார்ந்த சினிமா துறையை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் குடும்பத்தில் பல பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது, அவர்களை அழைத்து பஞ்சாயத்து செய்து தீர்ப்பு வழங்கலாம், ஆனால் பாவம் ஏழைகளின் அறியாமையை பயன்படுத்தி அவர்கள் செய்த தவறை உலகம் அறிய செய்து அவமானம் படுத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றிய சில தகவல்களை சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

அதில் லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழக்கும் நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள் என்றும்,மேலும் பெரும்பாலும் கள்ள காதல் விவகாரத்தை கையில் எடுத்து, அவர்களுக்கு 5 ஆயிரம் அல்லது 10 ஆயிரம் தந்து அழைத்து வந்து நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்து, அவர்களுக்கு நல்ல வழியை காட்டுவதாக கூறிக்கொண்டு அவர்கள் குடும்பத்தை அசிங்க படுத்தும் வேலையை தான் செய்து வருகிறார் லட்சுமி ராம கிருஷ்ணன்,

அவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு கட்டணம் செலுத்தாமல், அடுக்கு மாடி குடியிருப்பு நிர்வாகத்திடம் லட்சுமி ராமகிருஷ்ணன் சண்டையிட்டதின் காரணமாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என பிரபல சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களை பணம் கொடுத்து அழைத்து வந்து அவர்கள் அந்தரங்ககளை அவர்கள் வாயாலே சொல்ல வைத்து அதன் மூலம் லட்சுமி ராமகிருஷ்ணன் பணம் சம்பாரிப்பதும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது குறிப்பிட்டத்தக்கது.

சூர்யா கும்பலில் மாபெரும் பித்தலாட்டத்தை கிழித்து தொங்கவிட்ட பரிதாபம்.