கடந்த 2020 ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் நடைபெறும் பூமி பூஜைக்கு முன், இந்தியாவில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்த இந்த நாசவேலையினை தடுக்கும் முயற்சிகளில் உளவுத்துறை தீவிரமாக இறங்கிய போது, கேரளாவில் தங்கம் கடத்தும் கும்பல் சிக்கியது. இதனைத் தொடர்ந்து தங்க கடத்தல் மூலம் தேச விரோத சக்திகளுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து. இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.
கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் செயலாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷிற்கு இந்த தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதும் மேலும் இது போன்று பல முறை தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்ததை தொடர்ந்து தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.
இதனை தொடர்ந்து ஸ்வப்னா சுரேஷை கைது செய்து தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில், தங்கம் கடத்தலில் மூலம் வரும் பணம் சினிமா துறையில் முதலீடு செய்யப்பட்டுவதாகவும் மேலும் தீவிரவாத செயல்களுக்கு இந்த பணம் பரிவர்த்தனை நடந்துள்ளது தெரியவந்ததை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியது தேசிய புலனாய்வு அமைப்பு.
தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில் முக்கிய அரசியல் மற்றும் சினிமாத் துறையை சேர்ந்த புள்ளிகள் இதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சினிமா துறையை சேர்ந்தவர்கள் இது போன்ற சட்டவிரோத பண பரிவர்த்தனைகளை அவர்கள் நடத்தும் அறக்கட்டளை மூலம் செய்து வரலாம் என்கிற சந்தேகம் பலருக்கு எழுந்தது. மேலும் கேரள தங்க கடத்தல் விவகாரம் பின்பு சந்தேகத்துக்குரிய முக்கிய சினிமா புள்ளிகள் தேசிய புலனாய்வு பிரிவால் தீவிரமாக கண்காணிக்க பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் தற்பொழுது தேசிய புலனாய்வு அதிகாரிகளால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் தொடர்பு உடைய பல அமைப்பினரின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தியாவில் நடந்த பல்வேறு கலவரங்கள், படுகொலைகளில் இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக வந்த புகாரின் பேரில், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வங்கிகளில் பிஎஃப்ஐ அமைப்பு ரூ.120 கோடி டெபாசிட் செய்திருப்பதும், வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் அதிக அளவிலான தொகையை கொண்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கடந்த 2020 ஆண்டு கேரள தங்க கடத்தலின் வரும் பணம் சினிமாவில் முதலீடு செய்து தீவிரவாத செயலுக்கு பண பரிவர்த்தனை செய்யப்படுவதை கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், தங்க கடத்தல் கும்பலுக்கும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கும் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏற்கனவே தங்க கடத்தலின் சினிமாவில் முதலீடு செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது போன்ற சம்பவங்களை தொடர்பு படுத்தி, கடந்த சில நாட்களாக தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்தி வரும் அதிரடி சோதனையால், முக்கிய சினிமா புள்ளிகள் நடத்தும் அறக்கட்டளைக்கு நீதி வசூல் செய்வதை தாற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, சம்பந்தப்பட்ட அந்த சினிமா புள்ளிகள் பதட்டத்துடன் செயல்படுவதில் பின்னணி குறித்து அவர்கள் மீது பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.