சூர்யாவின் சூழ்ச்சியை சூரி புரிந்துகொள்ள வேண்டும்.. முக்கிய பிரபலம் எச்சரிக்கை..! என்ன சூழ்ச்சி தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் கார்த்திக் நடிப்பில் முத்தையா தயாரிப்பில் திரைக்கு வர இருக்கும் படம் விருமன், இந்த படத்தில் ஆடியோ வெளியிட்டு விழா சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது, இந்த நிகழ்வில் விருமன் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். நிகழ்ச்சி மேடையில் நடிகர் சூரி பேசுகையில், ஆயிரம் கோவில் கட்டுவதை விட, ஆயிரம் அன்ன சத்திரம் கட்டுவதை விட ஒருவரை படிக்க வைப்பது பல 100 ஆண்டுகள் பேசும்,

அதை மிக சிறப்பாக செயல்படுத்தி வரும் அண்ணன் சூர்யாவுக்கு நன்றிகள் என சூரி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சூரியின் இந்த பேச்சுக்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சூரியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து பற்றி பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்ததாவது, நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா மற்றும் அவருடைய தந்தை சிவக்குமார் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள், இந்து மத சம்பிரதாயங்கள் பற்றி கோவில்கள் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பதை தமிழ் சமூகம் நன்கு அறியும்.

குறிப்பாக ஜோதிகா அவர்கள் தஞ்சை பெரிய கோவில் தேவையில்லை என்றெல்லாம் கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, சூர்யாவும் கூட தன்னை ஒரு முற்போக்காளராக காட்டிக் கொள்வதற்காக பல்வேறு சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். நடிகர் சூரிக்கு இது போன்ற அரசியல் சம்பந்தமான விழிப்புணர்வு அவரிடம் இல்லை என்கிற பின்னணியில் தான் அவருடைய கருத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பெரும் கதாநாயகன் திரைப்பட விழாவில், அந்த கதநாயகனின் ரசிகர் கூட்டத்தில் நடிகர் சூரி அந்த கதாநாயகனை பாராட்டி சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார் என்று தான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, நடிகர் சூரி ஏதோ இந்து மதத்தை தவறாக பேசிவிட்டார் என்று நான் பார்க்கவில்லை. ஏனென்றால் நடிகர் சூரி அவர்கள் மதுரையைச் சார்ந்தவன் என்பதால் தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்தவன் நான்.

அவர் சொந்தமாக நடத்தும் உணவகங்கள் கூட மீனாட்சி அம்மன் பெயரில் அம்மன் உணவகம் என்று தான் பெயர் வைத்துள்ளார். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அவருடைய உரையில் தொடக்கத்தில் கூட மீனாட்சி அம்மனின் புகழைப் பேசி, அம்மனின் அருள் பற்றி பேசிவிட்டு தான் உரையை தொடங்குகிறார். அதனால் நடிகர் சூரி அவர்கள் ஏதோ இந்து கோவிலுக்கு எதிராக பேசி விட்டார் என்று நான் நினைக்கவில்லை.

மகாகவி சுப்பிரமணிய பாரதி என்ன கருத்தை சொன்னாரோ அதே கருத்தை பிரதிபலித்துள்ளார் நடிகர் சூரி. பாரதி பாடுகிறார் ‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என பாடுகிறார்.

நாடு முழுவதும் அன்னதானம் மடங்களை உருவாக்குவதை விட, கோவில்களை ஆயிரக்கணக்கில் கட்டுவதை விட, ஒரு ஏழைக்கு எழுத்தறிவு கொடுப்பது என்பது மிகச் சிறந்தது என்று பாரதி பாடுகிறார். அந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகளை தான் நடிகர் சூரி அவர்கள் பாரதியாரின் பெயரை குறிப்பிடாமல் குறிப்பிடுகிறார். ஆனால் பாரதியார் சொன்ன காலம் வேறு, அந்த சூழல் வேறு, அதிலும் சூர்யா மாதிரியான நடிகர்கள் கலந்து கொள்ளும் மேடையில் நடிகர் சூரி இந்த பேச்சை தவிர்த்து இருக்க வேண்டும்.

இருந்தும், சூரி பேசியதில் உள்நோக்கம் எதுவுமில்லை. சூரியின் குடும்பத்தையும் நன்றாக அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர், ஆலய வழிபாட்டை போற்றுகின்றவர். இனி வரும் காலங்களில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டங்களில் எச்சரிக்கையுடன் அவர் பேச வேண்டும். பாரதியின் பாடல்களை முதல் இரண்டு வரிகளை மிக அற்புதமாக எடுத்துச் சொன்னார் சூரி, ஆனால் சொல்லக்கூடாத இடத்தில் சொல்லிவிட்டார் என்று தான் நான் பார்க்கிறேன் என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

தேவயானி, ரம்பாவை தூக்கிய அன்புச்செழியன்… வாங்கிய பணத்திற்கு என்ன செய்தார் தெரியுமா.?