பாலியல் குற்றவாளிக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினிகாந்த்… ரஜினிகாந்த்க்கு எதிராக வலுக்கும் கண்டனம்.!

0
Follow on Google News

நடிகர் விஷால் நடித்த திமிரு, தனுஷ் நடித்த மரியான், சிலம்பரசன் நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் போன்ற படங்களில் வில்லன் நடிகராக நடித்தவர் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் விநாயகன். இவர் மலையாள சினிமாவில் வில்லன் நடிகராக பிஸியாக வலம் வந்தவர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாடலிங் துறையை சார்ந்த மிருதுளா தேவி என்பவர் இவர் மீது பரபரப்பு பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள விநாயகனை அழைத்தபோது, தன்னையும் தன்னுடைய தாயாரையும் அவருடைய விருப்பப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆபாசமாக பேசியதாக விநாயகன் மீது கேரளாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார் மாடலிங் துறையை சேர்ந்த மிருதுளா தேவி. இதனை தொடர்ந்து மலையாள சினிமா வில்லன் நடிகர் விநாயகன் மீது வழக்கு பதிவு செய்து கேரளா போலீசார் கைது செய்தனர்.

பின்பு நீதிமன்றம் மூலம் ஜாமினின் வெளிவந்த விநாயகன் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,மாடலிங் மிருதுளா தேவி தன் மீது தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் வில்லன் நடிகர் விநாயகன். இது கேரள சினிமாவில் மிக பெரிய அவப்பெயரை விநாயகனுக்கு பெற்று தந்தது. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய விநாயகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது விநாயகன் மீது உள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, திருமணத்திற்கு முன்பு யாரும் செக்ஸில் ஈடுபடாமல் இருக்கிறீர்களா.? என பத்திரிக்கையாளர் நோக்கி கேள்வி எழுப்ப, அதற்கு பத்திரிகையாளர் ஒருவர் நான் ஈடுபடவில்லை என பதில் அளித்தார். உடனே கோபப்பட்ட விநாயகன் அந்த பத்திரிக்கையாளரை தகாத வார்த்தைகளால் ஆபாசமாக திட்டினார்.

மேலும் நான் திருமணத்திற்கு முன்பு 10 பெண்களுடன் உறவு வைத்துள்ளேன், அவர்களின் அனுமதி பெற்று தான் உறவு வைத்தேன் என்று தெரிவித்த விநாயகன். அங்கிருந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை கைநீட்டி இந்த பெண்ணுடன் நான் பாலியல் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால், நேரடியாக இந்த பெண்ணிடம் கேட்பேன், ஆனால் இவர் முடியாது என்று சொல்வார்.

ஆனால் என்னுடன் பழகிய பெண்களை, நான் பாலியல் உறவுகளுக்கு அழைத்த போது, அவர்கள் யாரும் மறுப்பு சொல்லவில்லை என்று வில்லன் நடிகர் விநாயகன் பேசியது ஒட்டுமொத்த மலையாள சினிமா துறையினர் மத்தியில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இதில் ரஜினிகாந்துக்கு வில்லனாக பாலியல் சர்ச்சையில் சிக்கிய மலையாள நடிகர் விநாயகன் கமிட்டாகி உள்ளார். ஜெயிலர் படம் பிற மொழிகளிலும் வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காக, கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், அதே போன்று பாலியல் சர்ச்சையில் சிக்கிய கேரளா நடிகர் விநாயகன் ஆகியோர் ஜெயிலர் படத்தில் இடம் பெறுவதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

ஆனால் பாலியல் குற்றவாளியான விநாயகன் ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ளதற்கு மலையாள சினிமா துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. பாலியல் குற்றவாளியான விநாயகன், தான் மாடலிங் துறையை சேர்ந்த ஒரு பெண் தெரிவித்த பாலியல் குற்றத்தை ஒப்பு கொண்டு, மேலும் தான் 10க்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்துளேன் என பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசி பெரும் சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகருக்கு, ரஜினிகாந்த் தன்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இதற்கு ரஜினிகாந்துக்கு எதிராக மலையாள மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது, மேலும் ஒரு பாலியல் குற்றவாளி நடிக்கும் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருவது ஜெயிலர் படத்திற்கு மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.