அட காஷ்மீரில் படம் எடுத்தால் அரசு சலுகையா.? எத்தனை கோடி மானியம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படம் முடித்த உடனே தன்னுடைய புதிய படமான லியோ படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக கலந்து கொண்டுள்ளார் நடிகர் விஜய். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். தற்பொழுது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருவதால்,

மேலும் அவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர் வெற்றியின் காரணமாக லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. காஷ்மீரில் தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் காஷ்மீரில் மட்டும் சுமார் 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது பட குழு.

இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் காஷ்மீரில் நடைபெற ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அதேபோன்று லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பும் காஷ்மீரில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். காஷ்மீர் சென்று படம் எடுப்பதற்கு முக்கிய காரணம் அந்த மாநில அரசு அறிவித்துள்ள மானியம் தான் என்று கூறப்படுகிறது.

காஷ்மீரில் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் படம் எடுக்கும் படம் நிறுவனத்திற்கு சுமார் 3 கோடி ரூபாய் மானியம் அந்த மாநில அரசு வழங்குவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் காஷ்மீரில் இருக்கும் டூரிஸ்டத்தை டெவலப் செய்வதற்காக இவ்வாறு அந்த அரசு செய்து வருவதாகவும், மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு அவர் அந்த மாநிலத்தின் டூரிஸ்ட் டெவலப் ஆன பின்பு இந்த மானியம் நிறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.