மருமகன் தனுஷ்க்கு இல்லாத உரிமை உனக்கா.. டென்ஷனில் சிவகார்த்திகேயனை என்ன செய்தார் ரஜினி தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் காலா. இந்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், இயக்குனர் ரஞ்சித்யிடம், காலா படத்தில் சில நிமிடங்கள் மட்டும் வரும்படி தனக்கு கெஸ்ட் ரோல் நடிக்கும் வாய்ப்பை கேட்டுள்ளார். ரஞ்சித் இது குறித்து ரஜினிகாந்திடம் கேட்டபோது. என்னுடைய படம் ரஜினிகாந்த் படமாக தான் இருக்க வேண்டும் என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

தனுஷ் எனது மருமகனாக இருந்தாலும், என்னை பொருத்தவரை சினிமா வேறு, குடும்பம் வேறு. என்னுடைய படத்தில் கெஸ்ட் ரோலாக வரவேண்டும் என்றால் என்னை விட பெரிய நடிகரான அமிதாப்பச்சன், போன்றோர் வரலாம் என மருமகன் தனுசுக்கு தன்னுடைய படத்தில் கெஸ்ட் ரோல் ஆக வருவதை ரஜினிகாந்த் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படம் ஜெயிலர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இயக்குனர் நெல்சன் நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் நெல்சனிடம் ஜெயிலர் படத்தில் ஜெயிலர் படத்தில் தனக்கு கெஸ்ட் ரோல் காட்சியில் நடிக்கும் வாய்ப்பை அமைத்து தரும்படி சிவகார்த்திகேயன் கேட்டுள்ளார்.

ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில், சில நிமிடம் மட்டும் கெஸ்ட் ரோலாக வந்து போனால், சினிமாவில் என்னுடைய மதிப்பு மேலும் அதிகரிக்கும், இதில் நடிக்க எனக்கு சம்பளம் கூட வேண்டாம் என சிவகார்த்திகேயன் கேட்டுள்ளார். நண்பன் ஆசையை நிறைவேற்ற ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் இடம் பெரும் வகையில் திரைக்கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி அதை ரஜினியிடம் தெரிவித்துள்ளார் நெல்சன்.

இதற்கு ஆரம்பத்தில் வேண்டாம் மறுத்துள்ளார் ரஜினிகாந்த், ஆனால் நெல்சன் விடுவதாக இல்லை, சில நிமிடங்கள் மட்டும் வரும் காட்சி படத்திற்கு முக்கியத்துவமாக இருக்கும் என்றெல்லாம் நெல்சன் பேசி உள்ளார். இதற்கு டென்ஷனான ரஜினிகாந்த், வேண்டாம் என்றால் விடுங்க சார், என்னுடைய படம் அது என் படமாகவே இருக்கட்டும் என கோபப்பட, உடனே உங்களுக்கு வேண்டாம் என்றால் தேவையில்லை சார் என நெல்சன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது மருமகனுக்கே தனது படத்தில் கெஸ்ட் ரோல் காட்சிக்கான வாய்ப்பை கொடுக்காத ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனுக்கு எப்படி கொடுப்பார், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ரஜினிகாந்த் சில நிமிடங்கள் கெஸ்ட் ரோல் நடிக்க கேட்டிருந்தால், அது ரஜினிகாந்த் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் இருந்திருக்கும், ஆனால் அவரோட படத்தில் இவர் கெஸ்ட் ரோலாக நடிக்க சிவகார்த்திகேயனின் அதிக பசங்கிதனம் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

நீ ..யாராக இருந்தா என்ன.. ஷங்கரை விரட்டியடித்த பெண் அதிகாரி.. உடனே இடத்தை காலி செய்..