2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகர் வடிவேலு அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதும் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் காணாமல் போய் விட்டார், இதற்கு காரணம் அதிமுக அரசு தான் என்றும், மேலும் விஜயகாந்தை இழிவாக வடிவேலு பேசியது தான் என செய்திகள் வெளியானால், ஆனால் இதற்கு முழுக்க முழுக்க வடிவேலுவின் ஆணவம் மற்றும் வாய் கொழுப்பு தான் உண்மை காரணம் என கூறப்படுகிறது.
வடிவேலு கதநாயகனாக நடித்த 23ம் புலிகேசி படம் மிக பெரிய வெற்றியை பெற்றதும், இனி நீங்க தானே அடுத்த சூப்பர் ஸ்டார் என சுற்றி இருப்பவர்கள் உசுப்பேத்தி விட ஆணவம் தலைக்கு ஏறி ஆட்டம் போட ஆரம்பித்தார் வடிவேலு, அடுத்தடுத்து அவர் ஹீரோவாக நடித்த இரண்டு படங்கள் தோல்வியை தழுவியது, மேலும் காமெடியனாக அவர் நடித்த படங்களுக்கும் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை.
இதற்கு காரணம் பட பிடிப்பின் போது, இந்த காட்சி சரியில்லை, வசனம் சரியில்லை,கதை சரியில்லை செட் சரியில்லை என இயக்குனரிடம் முரண்பாடுடன் வடிவேலு செயல்பட்டது தான் காரணம் என கூறபடுகிறது, மேலும் உச்சகட்டமாக இயக்குனர் சங்கர் தயாரிப்பில் புதிய படத்தில் ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் தொகையும் பெற்று கொண்டு பட பிடிப்பின் போது தொடர்ந்து இது சரியில்லை, அது சரியில்லை என வடிவேலு ஆணவத்துடன் நடந்துகொண்டது மட்டுமில்லாமல் அநகரிகமாகவும் நடந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பெரும் பண செலவில் அமைக்கப்பட்ட செட் சரியில்லை, இதை மாற்ற வேண்டும் என முரன்பிடிக்க, ஆனால் இயக்குனர் இந்த செட் தான் இந்த கட்சிக்கு பொருத்தமாக இருக்கும் என வடிவேலுவிடம் எடுத்து கூறியுள்ளார், ஆனால் வடிவேலு அந்த படத்தின் இயக்குனரிடம் சண்டையிட்டு, அந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் சங்கரிடம் உடனே இயக்குனரை மாற்றுங்கள், இந்த இயக்குனரிடம் நான் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
ஆனால் சங்கர், உங்களுக்கு என்ன பிரட்சனை சொல்லுங்க சரி செய்கிறேன், இயக்குனரை எப்படி மாற்ற முடியும் என சங்கர் எவ்வளவோ பணிந்து பேசியும் ஆணவத்துடன் நடந்து கொண்டுள்ளார் வடிவேலு, ஒரு கட்டத்தில் வடிவேலுவின் தலைக்கனமும், வாய் கொழுப்பும் அதிகமாக பொறுமை இழந்த படத்தின் தயாரிப்பாளரான சங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் தனது படத்தில் நடிக்க அட்வான்ஸ் பணம் பெற்று நடித்து கொடுக்க மாட்டேன் என்கிறார் வடிவேலு என புகார் கொடுத்துள்ளார்.
இதன் பின்பு இயக்குனர் சங்கருக்கே இந்த நிலைமை என்றால் என தமிழ் பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் வடிவேலுவை தங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்வதை தவிர்த்து வந்தனர், இதனால் தான் வடிவேல் படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் காணமல் போனார் என்றும், இவர் திமுகவுக்கு பிரச்சாரம் செய்ததால் தான் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனது என்பது தவறு என பிரபல சினிமா துறையை சேர்த்தவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் வடிவேலு பட்டும் திருந்துவதாக இல்லை, மீண்டும் ஆணவம் , வாய் கொழுப்பு என சற்றும் குறையாமல் பேசி வருகிறார், சமீபத்தில் மீண்டும் விஜயகாந்தை நக்கல் செய்து வம்புக்கு இழுத்துள்ள சம்பவம், அவருக்கு அவரே ஆப்பு வைத்து கொண்டுள்ளதாகவும், மேலும் மீண்டும் சினிமாவில் வடிவேலு ஜொலிப்பது சந்தேகம் என்கின்றனர் சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.