கடனாளியாக நடு தெருவுக்கு வந்த தனுஷ்… மறு வாழ்வு கொடுத்த ரஜினி..! அந்த நன்றி கூடவா தனுஷுக்கு இல்லை..

0
Follow on Google News

நடிகர் தனுஷ் இளம் வயதிலே தொடர் வெற்றி படங்களை கொடுத்து முன்னனி நடிகராக இடம் பெற்றவர். ஆரம்ப கட்டத்தில் தொடர் மூன்று வெற்றி படங்களை தனுஷ் கொடுத்திருந்தாலும். அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் தோல்வியை தழுவியது, இருந்தும் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மருமகன் என்பதால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் தன்னுடைய நடிப்பு திறமையால் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டார் தனுஷ்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து. இதன் பின்பு தனுஷ் சினிமா வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. இதன் பின்பு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய தனுஷ், தன்னுடைய படத்தில் எந்த நடிகை நடிக்க வேண்டும்,இயக்குனர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரமிக்க இடத்துக்கு வந்தார் தனுஷ், இதன் பின்பு தான் நடிகைகளுடன் தொடர்ந்து கிசு கிசுவில் சிக்க ஆரம்பித்தார் தனுஷ்.

தனது சொந்த தயாரிப்பு என்பதால், தனது படத்தில் நடிக்க வாய்ப்புகளை வழங்கி நடிகைகளை வேட்டையாட ஆரம்பித்தார் தனுஷ், சினிமா பட வாய்ப்புகளுக்காக தனுஷ் உடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டனர் நடிகைகள். இதனால் சக நடிகைகளிடம் கூத்தும் கும்மாளமாக இருந்த தனுஷ் தயாரிப்பு நிறுவனத்தை சரி வர கவனிக்காமல், மேலும் படத்தின் கதை தேர்வு என அனைத்திலும் கோட்டை விட்டார் தனுஷ்.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் தொடர் தோல்வியை சந்தித்த தனுஷ் சொந்தமான தயாரிப்பு நிறுவனம். ஒருக்கட்டத்தில் கடன் சுமையால் தத்தளித்தது. சசிகலா உறவினர் ஜெயா டிவி நிர்வாக இயக்குனர் விவேக் ஜெயராம் அவர்களிடம் மட்டும் சுமார் 80 கோடி வரை கடன் பெற்று இருந்தார் தனுஷ். இந்நிலையில் நடிகைகளை வேட்டையாடுவதில் தீவிரமாக இருந்த தனுஷ் சினிமா தொழிலில் கவனம் செலுத்தாமல் கடன் சுமையால் தத்தளித்து வந்தார்.

வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் தத்தளித்து வந்த தனுஷ் தனது மனைவி மூலம் மாமனார் ரஜினிகாந்த் உதவியை நாடியுள்ளார். இதன் பின்பு சம்பளம் வாங்காமல் தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த படம் தான் காலா, இந்த படத்தின் லாபத்தில் தனக்கு இருந்த அத்துணை கடன்களை அடைத்த தனுஷ், மாமனார் அறிவுரையை ஏற்று இனி சொந்தமாக படம் தயாரிக்க போவது இல்லை என்கிற முடிவுக்கு வந்தார்.

மாமனார் ரஜினிகாந்த் அவர்களால் மறு வாழ்வு பெற்று மீண்டு வந்த தனுஷ் இதன் பின்பு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தவர். தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், மாமனார் செய்த நன்றியை நினைத்த பேசி சரி செய்து சுமூகமாக சேர்ந்து வாழாமல், நன்றி மறந்து மனைவியை பிரிவது என முடிவு செய்துள்ளதை எப்படி தனுஷ் மனசாட்சி ஏற்று கொண்டது என பல்வேறு விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.